Whatsapp-ல்
உங்க நண்பர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ் எப்படி எந்த ஒரு அப்பிளிகேஷனும் இல்லாம
டவுன்லோட் பண்றதுனு பாக்கலாமா ?
உலகம்
முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்காக அதிகம் பயன்படுத்த கூடிய
ஒரு அப்பிளிகேஷன் சொன்னா அது கண்டிப்பா Whatsapp தான் Whatsapp ல
நாளுக்கு நாள் நிறைய அப்டேட்ஸ் வந்தாலும் கூட நிறைய வரவேற்பை பெற்ற ஒரு
அப்டேட் சொன்னா அது கண்டிப்பா நமக்கு புடிச்ச Videos and Photos நம்ம ஸ்டேட்டஸ்ல
வைக்குறது தான்
ஒவ்வொரு
தடவையும் நீங்க உங்க நண்பர்கள்கிட்ட அவங்க வைக்குற ஸ்டேட்டஸ் நல்லா இருக்கு
எனக்கு அனுப்புனு கேட்டு கேட்டு போர் அடிச்சுடுச்சா இதோ உங்களுக்காக தான் இது
இனிமே நீங்க உங்க நண்பர்கள் கிட்ட அது மாதிரி கேட்க வேண்டாம்
Google
Play Store-ல் நிறைய அப்பிளிகேஷன்ஸ் இருக்கு ஆனா எல்லாத்துக்கும்
அப்பிளிகேஷன்ஸ் டவுன்லோட் பண்றது உங்க ஸ்மார்ட் போனோட மெமரி மற்றும் ஆயுளையும்
குறைக்க வாய்ப்பு இருக்கு ஒரு சின்ன வழிமுறையை பயன்படுத்தி உங்க நண்பர்களோட
Whatsapp ஸ்டேட்டஸ் எப்படி எடுக்கலாம்னு பாக்கலாம்
வழிமுறை 1:
1.உங்க
Internal Storage or Phone Storage ஜை ஓபன் செய்யவும்
(பொதுவாக Whatsapp
தகவல்கள் எல்லாம் Internal Storage-ல் தான் சேமிக்கப்படும் ஒருவேளை நீங்கள்
External Storage-ல் சேமித்திருந்தால் அதை ஓபன் செய்யவும்)
2.செட்டிங்ஸ்ல்
மறைக்கப்பட்ட கோப்புகளை காட்டு (Show Hidden Files) என்ற விருப்பத்தை
தேர்ந்தெடுக்கவும்
3.
Whatsapp போல்டேரை இப்போது தேர்ந்தெடுக்கவும். போல்டருக்கு முன்பு .(Dot)
குறியீடுடன் கோப்பின் பெயர் இருந்தால் அவை எல்லாம் மறைக்க பட்ட கோப்புகள் என்று
அர்த்தம் இவை அனைத்தும் நீங்கள் மறைக்கப்பட்ட கோப்புகளை காட்டு (Show
Hidden Files) என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்காமல் பார்க்க முடியாது
4.
Media என்ற கோப்பை தேர்தெடுத்து உள்ளே செல்லவும் அதில் Dot குறியீடுடன் உள்ள
Statuses என்ற கோப்பை சொடுக்கவும் அதில் உங்க நண்பர்கள் Status
அனைத்தும் காட்டப்படும்
வழிமுறை 2:
1.MX Player உள்ளவர்கள் MX Player-ன் செட்டிங்ஸ் பகுதியை திறக்கவும்
2. Whatsapp Status Saver என்பதை ஆன் செய்யவும்
3.இனிமேல் நீங்கள் Whatsapp-ல் பார்க்கும் வீடியோ ஸ்டேட்டஸ் அனைத்தும் இதில் பதிவாகும் தேவையான ஸ்டேட்டஸை நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக