Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 செப்டம்பர், 2018

பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள்
 நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும். 
அதற்கு பாகற்காயை சரியாக சமைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு பலரும் 
அடிமையாகிவிடுவீர்கள். பின் பாகற்காய் என்றாலே விரும்பி சாப்பிடுவீர்கள். சரி, 
இப்போது பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா.

சுவாச கோளாறுகள் :
                        பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற 
சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.

கல்லீரல் பிரச்சனைகள் :
                    தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி,
 கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி :
                  பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
 அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பருக்கள் :
                   உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால்,
 பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு :
                            நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் 
பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மைஇன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள 
சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

மலச்சிக்கல் :
                    மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை
 வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை 
மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

ஆரோக்கியமான சிறுநீரகம் :
                         பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதய நோய் :
          பாகற்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, தமனிகளில் அடைப்புக்கள் 
ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதன் மூலம்
 இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

புற்றுநோய் :
                  பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி 
பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

எடை குறைவு :
             பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை 
வெளியேற்றும். மேலும் உடலின் மெட்டபாலிசம் மற்றும் செரிமான மண்டலத்தின் 
செயல்பாடு அதிகரித்து, உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். முக்கியமாக 
பாகற்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் தண்ணீர் 80-85% சதவீதம் உள்ளதால்,
 இதனை உட்கொண்டால், வயிறும் விரைவில் நிறைந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக