Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 செப்டம்பர், 2018

இதே நாளில் அன்று


முக்கிய நிகழ்வுகள்
🍀 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

🍀 1781ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி ஸ்பானிய கவர்னரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமைக்கப்பட்டது.


இன்றைய தினம் பிறந்தவர்

தாதாபாய் நௌரோஜி
🌹 சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நௌரோஜி 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

🌹 இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர்தான்.

🌹 இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.

🌹 இவர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்தியர்களின் துயரத்தை வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள்இ திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாக திகழ்ந்தவர்.

🌹 இந்தியாவின் ஆதார வளங்கள்இ நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதை புள்ளி விவரத்துடன் எடுத்துக்கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870-ல் சுட்டிக்காட்டினார்.

🌹 'பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா' என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார்.

🌹 தாதாபாய் நௌரோஜி தனது 91வது வயதில் (1917) மறைந்தார்.