Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 27 செப்டம்பர், 2018

பாசிப்பருப்பு மாம்பழ அல்வா


Image result for பாசிப்பருப்பு மாம்பழ அல்வா


மிக நல்ல சுவையுடன் இருக்கும் பாசிப்பருப்பு மாம்பழ அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். செய்ய மிக எளிதானதும் ருசியானதுமாகும். 
தேவையான பொருட்கள்:

மாம்பழத் துண்டுகள் - 1 கப்
முந்திரி - 10திராட்சை - 10உருக்கிய நெய் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மண்டை வெல்லம் - 100 கிராம் (துருவியது)தண்ணீர் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
வறுத்த பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்

செய்முறை:

*
வாணலியில் நெய் 6 ஸ்பூன் ஊற்றி சூடானவுடன் முந்திரி, திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
*
பிறகு அந்த நெய்யிலேயே பாசிப்பருப்பைச் சேர்த்து வதக்கி, 1 கப் தண்ணீர் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும்.
*
மற்றொரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி, அது பொன்னிறமானவுடன், வேகவைத்த பாசிப்பருப்பைக் கொட்டிக் கிளறி, மாம்பழத் துண்டுகளையும் சேர்த்து அளவான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.
* 1
ஸ்பூன் தண்ணீர், வெல்லப்பாகு - 1/2 கப் சேர்த்துக்கிளறி, 2 நிமிடம் கழித்து பச்சரிசி மாவு தூவிக்கிளறி, கலவை கெட்டியாகி அல்வாப்பதம் வந்தவுடன் 1 ஸ்பூன் நெய், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சூடாகப் பரிமாறவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக