விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று, Christie’s எனப்படும் ஏல நிறுவனம் ஒன்று, அக்கடிதத்தின் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளது.ர்
ஜெர்மனியை சேர்ந்த தத்துவவாதி எரிக் கட்கிண்ட் என்பவர்க்கு தான் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னாள் ஜெர்மன் மொழியில் அக்கடிதத்தை எழுதியுள்ளார் ஐன்ஸ்டீன்.
கடவுள் மற்றும் மதம் தொடர்பான அவரது புரிதலையும் அவரது கண்டுபிடிப்புகள் சிலவற்றை பற்றியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஐன்ஸ்டீன். சுமார் ஒன்றரை பக்கம் உடைய அந்த கடிதத்தை Christie’s நிறுவனம் டிசம்பர் மாதம் 4ம் தேதி விற்பனை செய்யப்போகிறது.
2008ம் ஆண்டு அந்த கடிதத்தை ஏலத்திற்கு விட்டபொழுது சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஒருவர் எடுத்துக்கொண்டார் என தெரிவித்த Christie’s நிறுவனம் இந்த ஆண்டு அந்த கடிதத்தின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
இதே போல, 1939ம் ஆண்டு ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று 2002ம் ஆண்டு 14 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக