Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 அக்டோபர், 2018

மோடியின் திட்டம் தோல்வி.


Image result for modi
கருப்பு பணத்திற்கு எதிராக மோடி அரசு கொண்டு வந்த பணமதிபிழப்பிற்கு பின் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு வகையான இன்னல்களை எதிர்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தனர் ஆனால் நாட்டின் பொருளாதார நிலை மீள ஆழத்திற்கு சென்றது..


டிஜிட்டல் இந்தியா கோ கேஷ் லெஸ் என்ற முழக்கமும் ஒருபுறம் ஒலிக்க அலைகள் நடுவே சிக்கி கொண்ட படகை போல மக்கள் தவித்து கொண்டு இருக்க இதனிடையே கொண்டு வரப்பட்டது தான் பீம் என்ற செயலி

பீம் போன்ற பல செயலிகள் இணைய தளத்தில் நிறைய இருந்தாலும் மத்திய அரசு கொண்டு வந்த செயலி என நிறைய பேர் ஆரம்பத்தில் இதனல.உபயோகிக்க பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொண்டு இந்த செயலி பின்நாளில் முழுமை பெற்றது
பீம் செயலி பிரச்சினைகளில் இருந்த பொழுது அதை மறைக்க பீம் செயலியை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பரிசு என அறிவித்து நாட்டு மக்களின் மனநிலையை மாற்றிவிட்டனர்

பீம் செயலியை பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் மற்றும் பல இடங்களில் உள்ள விரைவு தகவல் குறியீட்டை (QR Code) உள்வாங்கி (Scan) பணம் செலுத்தலாம் என அறிவிப்பு வந்த பிறகு அனைத்து வங்கிகளும் தங்களுடைய வங்கி செயலிகளில் பீம் செயலியை ஒன்றினைத்தது
இப்பொழுது அனைத்து வங்கி செயலிகளிலும் பீம் வசதியை மக்கள் பயன்படுத்த முடியும்

ஆனால் இன்று வரை எந்த ஒரு வணிக நிறுவனங்களும் பீம் செயலிகான  விரைவு தகவல் குறியீட்டை (QR Code) காண முடிவதில்லை மாறாக பேடிம் இன்னும் பிற செமலிகள் மூலம் பணம் ஏற்று கொள்ளப்படும் என்ற அறிவிப்பை தான் காணமுடிகிறது.

மாறாக பல தனியார் செயலிகள் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி தங்களது வாடிக்கையாளர்களாக வைத்துள்ளது ஆனால் அரசோ இதை பெரிதாய் ஊக்குவிக்காமல் உள்ளது. மக்களை பற்றி எப்போதும். கவலை கொள்ளாமல் தனியார் நிறுவனங்கள் இலாபம் பார்க்கவும் வணிகம் ஈட்டவும் இந்த அரசு வழிவகை செய்துக்கொடுக்கிறது..

மோடி அரசு கொண்டு வந்த திட்டங்களில் இதுவும் தோல்வியில் முடிந்த ஒன்றாகும்..
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக