Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 அக்டோபர், 2018

சிஸ்டமேடிக் இன்வஸ்மெண்ட் பிளான் என்றால் என்ன ? (What is meant by Systematic Investment Plan?)


Image result for Systematic Investment Plan?

சிஸ்டமேடிக் இன்வஸ்மெண்ட் பிளான் என்றால் என்ன (What is meant by Systematic Investment Plan?)

முதலீட்டாளர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யலாம். உதாரணமாகநான் மாதம் ஆயிரம் ருபாய் வீதம் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டில் (SBI Mutual Fund) சி.ப் (SIP) மூலமாக முதலீடு செய்கிறேன்.
இவ்வாறு முதலீடு செய்யும் பொழுதுஅப்பிளானின் தற்போதைய NAV-யை பொறுத்து சில யூனிட்கள் (Units)நம் கணக்கில் சேர்ந்து விடும்.

சி.ப் இன்வஸ்மெண்ட் பயன்கள் யாவை? (Advantages of SIP based investment)
  • இம்முதலீட்டின் மூலம்நாம் மிக பெரிய தொகையை உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம்.
உதாரணமாக எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டை (SBI Mutual Fund) எடுத்துக்கொள்வோம். அதன் தற்போதைய, NAVமுகப்பு விலையை (Face value) வீட சற்று உயர்ந்த நிலையில் உள்ளது என்றும் எடுத்துக்கொள்வோம். இப்பொழுதுநாம் ஒரு மிக பெரிய தொகையை முதலீடு செய்யகிறோம் என்றால் நாமக்கு குறுகிய யூனிட்களே கிடைக்கும். இதனால்நமக்கு மிகப்பெரிய லாபமோ அல்லது நட்டமோ ஏற்ப்பட வாய்புள்ளது. அதாவது,இம்முறையில் ஒரு சாராசரி (Average) இருக்காது.
அதே எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டையில் (SBI Mutual Fund),நாம் மாதம் சிறு தொகையை சி.ப் (SIP) மூலம் முதலீடு செய்கிறோம் என்று எடுத்துக்கொண்டால்விலையில் சாராசரி (Average) ஏற்ப்பட்டு குறைந்த விலையில் சில யூனிட்களும்அதிக விலைக்கு சில யூனிட்களும் கிடைக்கும். இதனால்நமக்கு மிக பெரிய நட்டம் ஏற்ப்படாமல் காத்துக்கொள்ளலாம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கும் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஸ்கீமிற்கும் வித்தியாசம் என்ன ? (Difference between mutual fund investment and portfolio management scheme)

இவை இரண்டுமே முதலீட்டாளர்களிடம் இருந்து தொகை பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்வதுதான். ஆனால்,செய்யும் முதலீட்டாளர்கள் வேறு படுவார்கள். மியூச்சுவல் ஃபண்டில்பெறுமளவு சிறு முதலீட்டாளர்களே (retail investors) பங்கு பெறுவார்கள். ஆனால் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஸ்கீம்ஸில்பெறுமளவு பெரிய முதலீட்டாளர்கள் பங்கு பெறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக