Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 அக்டோபர், 2018

மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? (Why should I invest in mutual funds?)

Image result for mutual funds

மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? (Why should I invest in mutual funds?)
  • முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையை பற்றிபோதிய அறிவின்மை மற்றும் நேரமின்மை போறன்வற்றின் காரணமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆவர்வம் காட்டுவார்கள்.
  • பங்குச்சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பங்குகளை கூடமியூச்சுவல் ஃபண்ட் முலம் சிறிய யூனிட்டுகளாக வாங்கிக்கொள்ளலாம். (Mutual funds provide cheap access to high worth shares in stock market)
  • மியூச்சுவல் ஃபண்ட்-களில் ரிஸ்க் குறைவு. (Less risk in mutual fund)
  • நாம் முதலீடு செய்யும் தொகை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், நிபுணர்களை கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ரிஸ்க் குறைவதுடன் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • பங்குச்சந்தையில் லிஸ்ட் (List) செய்யப்பட்ட கம்பனிகளின் மிக முக்கியமான தகவல்கள்,பொதுவாக ஒரு முதலீட்டாளருக்கு கிடைக்காது. ஆனால்அத்தகைய தகவல்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்-யில் எப்படி முதலீடு செய்வது? (How to invest in mutual funds?)
முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் அங்கிகரிக்கப்பட்ட தரகர்கள் (Registered members)மூலமாகவோஅல்லது நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கோ சென்று முதலீடு செய்யலாம். இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் (Application form)பாண் எண் (PAN Number), மற்றும் முதலீடு செய்வதற்கான தொகையை காசோலையாகவோ (check) அல்லது வரை ஓலையாகவோ (Demand Draft) எடுத்து செல்ல வேண்டும்.
எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதுஅல்லது எதை தேர்வு செய்வது? (How to choose best mutual fund?)
  • மியூச்சுவல் ஃபண்ட் ஆபர் டாக்குமெண்டை (Mutual fund offer document) கவனமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
  • மியூச்சுவல் ஃபண்ட் பிளானை தேர்வு செய்ய வேண்டும். அதாவது டிவிடண்ட் பிளானகுரோத் போன்றவை. (Choose plan – Growth/Dividend etc..)
  • தேர்வு செய்த பிளானின் தற்போதைய NAV-யை பார்க்க வேண்டும்.
  • பிளானின் கடந்த கால செயல்பாடுகளை பற்றி ஆராய வேண்டும். அதாவதுஎவ்வளவு டிவிடண்ட் கொடுத்துள்ளார்கள்எத்தனை முறை கொடுத்துள்ளார்கள் போன்றவை. (Past record of mutual fund)
  • தேர்வு செய்த மியூச்சுவல் ஃபண்ட் பிளானை வாங்குவதற்கு எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிப்பார்கள். அதாவது என்டிரி லோட் மற்றும் எக்ஸிட் லோட் ஆகியவை. (How much entry load & exit loads are charged)
நிபுணர்களின் ஆலோசனை பெறுவது. (Get guided by experts)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக