Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 13 நவம்பர், 2018

தம்பிக்கு எந்த ஊரு? ஞபாகம்-2

Related image

நான் எனது பணியில் சேர்ந்த புதிது!!!

அன்று ஏதோ பணி காரணமாக வேறொரு புதிய களத்திற்கு (அப்போது)செல்ல நேர்ந்தது!!

புதிய களம்.. நான் உள்ளே நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அறியாமல் மிரள மிரள விழித்து கொண்டு இருந்தேன்..



என்னை நோக்கி ஒருவர் வந்தார்..

"தம்பி.. இங்க எல்லாம் அனுமதி  இல்லாம வர கூடாது!

நீங்க யார்?" என்று கேட்டார்..


நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. நான் வந்த நோக்கத்தையும் கூறினேன்.


அவர் "அப்படியா!! சார் மேனேஜரைப் பார்க்க போய் இருக்கார். கொஞ்ச நேரத்தில வந்து விடுவார்" என்றார்..


 சிறிது நேர மெளனத்திற்குப் பின், அவர் என்னைப் பார்த்து

"உங்களுக்கு எந்த ஊரு?" என்று கேட்டார்...

நான் புதியவன் என்பதால், பலரும் என்னைப் பற்றி விசாரிப்பது வழக்கம்..

நான் "தஞ்சாவூர் " என்று பதிலளித்தேன்.

 

அவர் உடனே கேட்டார்: "அப்படியா!!! தஞ்சாவூரில்  எங்கே?"

  "திருக்காட்டுப்பள்ளி பக்கம்"


 "அடடே!! அங்க எங்கே?"

எனக்கு உடனே ஆர்வம் தொற்றிக் கொண்டது... ! பார்க்க தஞ்சாவூர்காரர் போல் தெரியாவிட்டாலும், கண்டிப்பாக இவர் அந்த பக்கம் வசித்து இருக்க வேண்டும்


"கூத்தூர்" என்றேன்..


"அப்படியா!! அங்க எங்கே சார்?"

"அக்ரஹாரம்  சார்"..

உரையாடல் தொடர்ந்தது.. அவர் கேட்க கேட்க நான் என் வீடு இருக்கும் தெரு வரை சொல்லிவிட்டேன்..

இறுதியாக "ஓஹோ" என்றார்..


நான் ஆர்வ மிகுதியில் " சார் , நீங்களும் அந்த பக்கம் இருந்தீங்களோ?" என்றேன்..

அவர் கூறிய பதில் என்னைத் திகைக்க வைத்தது:



"நான் சென்னைக்கு பஸ்ஸில போகும் போது ஒரு முறை தஞ்சாவூரில்  காப்பி குடிச்சிருக்கேன் சார்" என்றார்...


எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை!!! 

எங்கள் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக