
மதுரை மாநகராட்சியில் கடந்த 3 நாட்களாக குடியிருப்புகளில் மாநகராட்சி சுகாதாரத் துறை யினர் சரியாக குப்பைகளை அகற்றா ததால் மலைபோலக் குவிந்து கிடக்கின்றன.
மதுரை மாநகராட்சி 100 வார்டு களில் தினமும் சராசரியாக 650 டன் குப்பைகள் சேர்கின்றன. இந்தக் குப்பைகளை, துப்புரவு ஊழியர்கள் சேகரித்து, உரக் கிடங்குக்கு அனுப்புவர். தீபாவளி யால் துப்புரவு ஊழியர்கள் பலர் விடுமுறையில் இருந்துள்ளனர். பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்களில் பலர் பணிக்கு வரவில்லை. இதனால் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பஸ்நிலையங்களில் மட்டும் கடந்த இரண்டு நாட்களாக துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது.
வார்டுகளில் உள்ள குடி யிருப்புகளில் சுகாதாரப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. துப் புரவுப் பணியாளர்கள் வராமல் குடியிருப்பு பகுதிகளில் குப் பைகள் மலைபோலக் குவிந்து கிடக்கின்றன. வழக்கமான குப் பைகளோடு, பட்டாசு குப்பைகளும் சேர்ந்துள்ளன.
மாநகராட்சி 21-வது வார்டு பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் சாலை முழுவதும் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன. இதுகுறித்து அப்பகுதியினர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் துப்புரவு பணியாளர்களை அனுப்பவில்லை. அள்ளப்படாத குப்பைகள் மேல் மழைநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
தற்போது மதுரையில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரப் பணிகளுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் தராதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுகாதார அதிகாரிகள் வார்டு ஆய்வுக்கு செல்லாமல் அறை களில் முடங்கி கிடப்பதால் நூறு வார்டுகளிலும் கண்காணிப்பு இன்றி சுகாதாரப் பணி தேக்கம் அடைந்துள்ளது.
எங்கள் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக