Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

ஞாயிறு, 11 நவம்பர், 2018

படை எடுக்காத ஒரே நாடு

நமது இந்திய தேசத்தைப் புகழ்ந்து பலரும் பல செய்திகள் எழுதுவர். அப்படி யாரோ எழுதிய இந்த செய்தி தான் பலராலும் இந்தியாவின் பெருமையைப் புலப்படுத்த பரப்பபடுகிறது:
இந்தியா என்கிற தேசம் தனது 10,000 ஆண்டு வரலாற்றில் இதுவரைவேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை
 இது உண்மையல்ல என்பதை சில வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர்.

உண்மை


பன்னெடுங்காலமாக இந்திய தேசத்தின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் பல நாடுகளின் மேல் போர் தொடுத்து இருக்கிறனர் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமலேயே சொல்கிறேன்)..

மிக எளிதான உதாரணங்களைத் தமிழ் மன்னர்களிடத்திலேயே காணலாம்:
  • இராசராச சோழன் இலங்கையின் மீதும், மாலத்தீவின் மீதும் படையெடுத்து வெற்றி கண்டவன்
  • 'கடாரம் கொண்டான்' எனப் புகழ் பெற்ற இராசேந்திர சோழன் தற்போதைய மலேசியா (ஸ்ரீவிஜயம்), இந்தோனேசியா (இலாமுரி தேசம்) ஆகியவற்றின் மீது படையெடுத்து கைப்பற்றினான்.
ராஜேந்திர சோழன் ஆட்சிபரப்பு

இந்தியா என்கிற தேசமே ஆங்கிலேயர் வந்த பின் தான் உருவானது. எனவே, 'இந்தியா என்கிற தேசம் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை' என்று சொன்னால் அது சரியே!! என்பவர்களுக்கு:

1961 ஆம் ஆண்டு நடந்த கோவா இணைப்பை (Annexation of Goa - 1961) ஒரு படையெடுப்பே.

"ஆபரேசன் விஜய்" என்று அழைக்கப்பட்ட, ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்த, அந்த போரின் காரணமாகவே போர்த்துகீய காலனிகளாய் இருந்த கோவா, டாமன், டையூரே ஆகியவைஇந்தியாவுடன் இணைந்து இந்திய மண்ணில் இருந்து காலனியாதிக்கம் அன்று ஒழிந்தது!! அந்த போருக்குப் பிறகு காலனியாக்க அடிமைத்தனத்தில் இருந்து அந்த பகுதிகள் விடுதலைப் பெற்றன என்பது உண்மை தான்.

"Liberation of Goa" என்று நாம் சொன்னாலும், அந்த பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தமையால்,  அது ஒரு படையெடுப்பே!!!

எங்கள் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக