Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

ஞாயிறு, 11 நவம்பர், 2018

கந்த சஷ்டி திருவிழா !!





🌟 பழநி, திருச்செந்தூர் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நாளை துவங்குகிறது. நவம்பர் 13ஆம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோவில் :

🌟 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் நடக்கும் கந்தசஷ்டி விழாவில் தமிழகம் மட்டுமல்லாது இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்களும் கலந்து கொள்வர்.

🌟 திருவிழா நாட்களில் தினமும், அதிகாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்படும். கோவிலில் உள்ள மண்டபத்தில், தினசரி கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கவுள்ளன.

சூரசம்ஹாரம் :

🌟 நவம்பர் 13ஆம் தேதி அதிகாலையில் நடை திறக்கப்படும். பின் மாலை நேரத்தில் கடற்கரையில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

பழநி :

🌟 பழநியில், நாளை உச்சிக்கால பூஜையில் காப்புக்கட்டுதல் நடைபெறும். நவம்பர் 13ல் கந்தசஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்படும். மதியம், 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 2:30 மணிக்கு சன்னதி நடை சாத்தப்படும்.

சூரசம்ஹாரம் :

🌟 மாலை வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது.

🌟 நவம்பர் 14ல் மலைக்கோவிலில் காலையில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், பெரியநாயகியம்மன் கோவிலில் இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும்.

ஆறுபடைவீடு :

🌟 முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும் ஆறு தலங்களை மட்டும் படை வீடுகள் என அழைப்பர். போர் புரியச் செல்லும் தளபதி. தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் 'படைவீடு". சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகன், படைகளுடன் தங்கி இருந்த தலம் திருச்செந்தூர். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து 'ஆறுபடை வீடு" என்கிறோம்.

- நாளை கந்தசஷ்டி வரலாற்றை பற்றி பார்ப்போம்...!!

எங்கள் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக