இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே
-ஆசான் திருமூலர்
சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழ்ச்சித்தர்களால் ஏற்படுத்தப்பட்டது. இந்த அண்டமும் சிவலிங்க(நீள்வட்ட / முட்டை) வடிவமே. இந்த அண்டத்திலுள்ள உயரணுக்களிலிருந்து, முழுவடிவம் பெற்ற அனைத்து உயிர்களும் சிவலிங்க வடிவமே.
சிவமும், சக்தியும், நாதமும், விந்துவும் கலந்து சிவசக்தி, நாதவிந்தாகப் படைப்புக்கள் நடைபெறுகின்றன. இந்த அண்டங்கள் எல்லாம் சிவசக்தியின் வடிவாதலால் அதனை (Universe is in the form of Energy) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால், ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.
ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவவமாகிய ஓம் எனும் ஓங்காரத்தில் அகரம் சிவம், உகரம் சக்தி, மகரம் மலம், நாதம் மாயை, விந்து உயிர் ஆகும்.
மனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கமாகவும், அதுவே சிதம்பரமாகவும், மேலும் அதுவே சதாசிவமாகவும் மற்றும் திருக்கூத்துமாகவும் உள்ளது. இதில் திருக்கூத்து என்பது சுழிமுனைக்கதவு திறந்தபின் புருவமத்தியாகிய சுழிமுனையில் சந்திர ஒளி, சூரிய ஒளி, வன்னியாகிய அக்னிஒளி முச்சுடர்களும் மாறிமாறி இயங்கும். இதுவே திருநடனம் அல்லது திருக்கூத்து எனப்படும்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக