Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 டிசம்பர், 2018

ஆண்ட்ராய்டு மொபைல் வேகமாக இயங்க நீங்கள் செய்யவேண்டிய வழிகள்

Image result for ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கிய புதிதில் மிக நன்றாக வேலை செய்யும் ஆனால் சில மாதங்கள் கழித்து மொபைலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.மொபைல் வேகம் குறைதல், மொபைல் வெப்பமாகுதல் மொபைல் ஹாங் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம் அவை எதனால் ஏற்படுகிறது மற்றும் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சிஸ்டம் அப்டேட் 

கிட்கேட்,லாலிபாப், ஓரியோ என ஆண்ட்ராய்டில் பல  ஓஎஸ்கள்  உள்ளன. தற்போது லாலிபாப் ஓஎஸ் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் இதில் குறைகள் திருத்தப்பட்டு புதிய அப்டேட் வந்தால்,உங்கள் மொபைலுக்கு இந்த அப்டேட் செட் ஆகுமா என்பதில் கூகிளில் சரிபார்த்த பிறகு அப்டேட் செய்யுங்கள். மொபைலில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் ஓஎஸ் அப்டேட் செய்ய வேண்டாம்.

ஆப் அப்டேட்  

வாட்சப், முகநூல்  போன்ற மூன்றாம் நபர் ஆப் குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு புதிய அப்டேட்டை வழங்குவார்கள், அப்டேட் செய்வதற்கு முன் அந்த ஆப் மிக நன்றாக இயங்குகிறது, எந்தஒரு பிரச்சனையும் இல்லை என்றால் அப்டேட் செய்யாதீர்கள். பிரச்சனை இருந்தால் அந்த அப்டேட்டில் சரி செய்யப்பட்டுள்ளதா என்பதை படித்த பிறகு அப்டேட் செய்யுங்கள். பிலே ஸ்டோர் /செட்டிங் /ஆட்டோ அப்டேட் நிறுத்தம் செய்யுங்கள்.

ஜங்க் பைல்ஸ் நீக்குதல் 

மொபைல் வாங்கியதிலிருந்து பல ஆப்களை பயன்படுத்தி டெலிட் செய்திருப்பீர்கள் இந்த ஆப்களை டெலிட் செய்தலும் அவற்றின் ஜங்க் பைல்ஸ் உங்கள் மொபைல் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும். ஜங்க் பைல்ஸ்களை நீக்குங்கள், பயன்படுத்தாத ஆப் களை இப்போதே நீக்குங்கள்.

பைல் சிஸ்டம் 

மொபைல் வாங்கிய புதிதில் உங்கள் ஸ்டோரேஜ் தெளிவாக இருக்கும், குறிப்பிட்ட நாட்களுக்கு பின் அதிக அளவு பைல்களை  சேமித்து  வைத்திருப்பீர்கள். பல ஆயிரம் பைல்களிலிருந்து நீங்கள் கேட்ட பைல்லை எடுத்து தருவதற்கு பிரச்சனை ஏற்படலாம். எனவே  60 டு 70% வரை ஸ்டோரேஜ் செய்யுங்கள். போட்டோ வீடியோக்களை பேக்கப் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆட்டோ ஸ்டார்ட் 

உங்கள் மொபைல் ஆன் செய்தளிலிருந்து அனைத்து ஆப்களும் பின்புறமாக இயங்கிக்கொண்டுருக்கும் இதனால் மொபைலின் வேகம் மற்றும் பேட்டரி சக்தி குறையும். செட்டிங் / அப்ப்ளிகேஷன் மேனேஜர்  / ரன்னிங் ஆப்  சென்று தேவை இல்லாத ஆப்களை நிறுத்தம் செய்யுங்கள்.

மேற்கண்ட அனைத்தும் செய்துபாருங்கள். 3 அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை  பேக்டரி ரிசெட்  (factory reset) செய்யுங்கள். உங்கள்  மொபைல் வேகமாக இயங்க about  device / build number ஐ  3 முறை டேப் செய்யுங்கள்   Developer option  என்று  செட்டிங்கில் புதிதாக தோன்றும். அதில் windows animation scale ஆப் செய்யுங்கள். இதன்முலம் உங்கள் மொபைல் வேகமாக செயல்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக