Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 டிசம்பர், 2018

இந்த கடவுளை வணங்கினால் சனிஸ்வரனால் உங்களை நெருங்கவே முடியாதாம்..



அரச மரத்தினை இறை சிந்தையோடு வலம் வந்தால் சனீஸ்வரனால் ஏற்படும் இன்னல்கள் ஏற்படாது என்பர். ஒருமுறை தசரதனுக்கும், சனிசுவரனுக்கும் போர் மூண்டதாகவும் அதன்போது தசரதன் அரசமரத்தடியில் இருந்து சனீஸ்வரனை நோக்கி வழிபாடுகளை மேற்கொண்டதனால் சனிசுவரன் அருள்பாலித்ததாகவும் புராண கதைகள் எடுத்து இயம்புகின்றன.

சனிசுவரனிடம் அகப்படாத கடவுள் பிள்ளையார் மட்டுமே. பிள்ளையாரைப் பிடிக்க வேண்டிய தருணம் சனீசுவரனுக்கு வந்ததும் பிள்ளையாரிடம் சென்றபோது, பிள்ளையார் பெருமான், தான் இன்று ஆய்த்தமாக இல்லை என்றும் ஆதலால் நாளை வருமாரும் வேண்டியவர் தனக்கு நினைவூட்டும் வகையில் “நாளை வருவேன்” என எழுதி வைக்கச் சொல்லுகிறார்.

எனவே சனீஸ்வரன் மீண்டும் வரும் வேளைகளில் எல்லாம் எழுதியதைப் படிக்க வேண்டுவார். “நாளை வருவேன்” என சனீஸ்வரனும் படிக்க, அதுவே அவரது வாக்காக கருதி நாளை வரும்படி மீண்டும் வேண்டுவார். இப்படி, சனீஸ்வரரிடம் பிடிபட்டு இருக்கவேண்டிய காலத்தை பிடிபடாமல் புத்திசாதூரியமாக கழித்துவிடுவார்.


பிள்ளையாரிடம் ஏமாற்றம் அடைந்த சனீஸ்வரன் பிள்ளையாரை வழிபடுபவர்களுக்கு “அதிக இன்னல்களை கொடுக்கேன்” என வாக்குறுதி வழங்கினார். இதனால் பிள்ளையாரை வழிபடுபவர்கள் சனீஸ்வரனின் இன்னல்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. எனவே சனீஸ்வரனின் இன்னல்களில் இருந்து விடுவிக்கும் அரச மரமும், பிள்ளையாரும் ஒரே இடத்தில் இருப்பது வழக்கமாயிற்று.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக