உடலில் தீப்பிடித்தால் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். இதன்மூலம் தீ அணைந்து, அந்த இடம் குளிர்ச்சி அடையும். பின்னர் துணியைக் கொண்டு, தீக்காயம் அடைந்த இடத்தை மூட வேண்டும். ஒருவேளை தண்ணீர் இல்லாவிட்டால், கம்பளி, கோணி போன்றவற்றால் மூடி தீயை அணைக்க வேண்டும்.
தீக்காயம் அடைந்தவருக்கு தாகம் இருந்தால் தண்ணீர் கொடுக்கலாம். உதவிக்கு அருகில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் தீப்பிடித்துவிட்டால், பதற்றம் அடையக்கூடாது. உடனடியாக கீழே விழுந்து புரள வேண்டும். அப்போது உடலில் மண் படும் என்றாலும், அந்த நேரத்தில் தீயை அணைப்பதுதான் சிறந்தது.
தீயை அணைக்க மண்ணை அள்ளிப் போடக்கூடாது. மண் போட்டால் காயம் மேலும் பெரிதாகும். தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் இங்க் ஊற்றக்கூடாது. இங்க் ஊற்றினால் காயத்தின் ஆழத்தை கண்டுபிடிக்க முடியாது.
உடல் 100 சதவீதமாக பிரித்து கணக்கிடப்படுகிறது. அதன்படி தலை, நெஞ்சு, கை, கால்கள், முதுகு, வயிறு உள்ளிட்ட பகுதிகளுக்கு தலா 9 சதவீதம் என 99 சதவீதமும், பிறப்பு உறுப்புக்கு 1 சதவீதமும் கணக்கிடப்படுகிறது.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக