Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 டிசம்பர், 2018

கொத்தமல்லியில் இருக்கும் மருத்துவ குணங்கள்




















நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன.

கொத்தமல்லி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கொத்தமலை இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும். மிக எளிதாகவும், விலை மளிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று கொத்தமல்லியாகும்.

கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.

வயிற்று வலி, அஜீரண கோளாறுகல் போன்றவற்றை போக்குகிறது, இது ஈரலை பலப்படுத்துகிறது. கொத்தமல்லி ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த மருத்துவம் வெளிநாடுகளில் கூட மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

கொத்தமல்லி அரைத்து கண்களுக்கு மேலெ பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது. கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்ரறும் கண்களில் உள்ள கருவளையங்கள் ஆகியவை முகத்திற்கு முதிச்சியான தோற்றத்தை தரக்கூடியது.

கொத்தமல்லியில் பொட்டாசியம் சத்து அதிகம். ஆகவே உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும் குணம் கொண்டது. கூடவே ரத்த குழாய்களை சுத்தம் செய்யும் தன்மை வாய்ந்தது.கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். சிறுநீர் தேங்கினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகும். தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள் அகலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது, ஏப்பத்தினால், நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.

மாதவிலக்கு ஒழுங்கின்மை, வலி ஆகிய பிரச்சினைகளை உடையவர்கள் தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக