டிவியில் எந்த ஷாம்பு விளம்பரம் வந்தாலும் போதும். உடனே அதனை வாங்கி உபயோகித்துவிடும் பழக்கத்திற்கு நம்மில் பலரும் அடிமை. ஷாம்புவை மாற்றலாம் தவறில்லை. ஆனால் உங்களுக்கு பிடித்தபடி புதுப்புது பிராண்ட்டா மாற்றக் கூடாது.
அப்படி மாதத்திற்கு ஒருமுறை ஷாம்பு பிராண்ட் மாற்றுபவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த விஷயத்தை சரும மருத்துவர் அமீ தக்ஷினி கூறுகிறார். தொடர்ந்து படியுங்கள்.
முதலில் ஆரம்பிக்க வேண்டியது : ஷாம்புவை மாற்றுவது அவரவர் தனிப்பட்ட கூந்தலின் தன்மையைப் பொறுத்தது. உங்கல் கூந்தல் என்ணெய்ப்பசையா? வறண்ட கூந்தலா? என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்
எண்ணெய் கூந்தல் : எண்ணெய் கூந்தல் தலைக்கு குளித்ததும் ஓரிரு நாட்களில் மீண்டும் எண்ணெய் சுரக்க ஆரம்பிக்கும், முடிக்கற்றைகளில் எண்ணெய் இருப்பதை காணலாம். இவர்கள் ட்ரான்ஸ்பரண்ட் ஷாம்புவை உபயோகிக்க வேண்டும்.
வறண்ட கூந்தல் : வறண்ட கூந்தல் எண்ணெயில்லாமல் கடினமாக வறண்டு காணப்படும். நுனிப்பகுதிகளில் வெடிப்பு காணப்பட்டால் அளவுக்கதிகமாக வறட்சியாகிறது என தெரிந்து கொள்ளலாம். இவரகள் க்ரீம் பேஸ்டு ஷாம்புவை உபயோகிக்க வேண்டும்.
பரிசோதனை :
இந்த ஷாம்புதான் சிறந்த ஷாம்பு என்று யாராலும் உறுதியாக சொல்லமுடியாது. கூந்தலுக்கு தகுந்தாற்போல் எல்லா ஷாம்புக்களும் பலன் தருகிறது. பொடுகு இருப்பவர்கள் பொடுகை எதிர்க்கும் ஷாம்புவை உபயோகிக்கலாம்.
பரிசோதனை : எந்த ஷாம்புவாக இருந்தாலும் குறைந்தது 2 மாதங்கள் கழித்துதான் பலன் தெரிய ஆரம்பிக்கும். உபயோகித்தவுடன் தெரியாது. ஆகவே ஷாம்புவை உபயோகித்த பின் 2 மாதங்கள் பொறுத்திருங்கள்.பரிசோதனை : அதன் பின் உங்கள் ஸ்கால்ப்பில் வறட்சியாகவோ அல்லது வெள்ளையாக செதில் வந்தாலோ அந்த ஷாம்புவை நிறுத்த வேண்டும். உங்கள் கூந்தல் தகுந்தாற்போல் வாங்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக