Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 டிசம்பர், 2018

இந்த ராசிக்காரர்கள் கடும் கோபக்காரர்களாம்?.. இருந்தாலும் ரகசியத்தை மட்டும் ஒரு போதும் வெளியே சொல்லமாட்டார்கள்!



ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒவ்வொரு மாதிரியான குணாதிசயங்கள் இருக்கும். அதுவும் அது அந்த ராசிகளின் அதிபதியைப் பொறுத்து குணாதிசயங்கள் வேறுபடும். அதில் சில ராசிக்காரர்கள் மிகவும் கோபக்காரராகவும், சிலர் அதிகம் பொய் பேசுபவராகவும், இன்னும் சிலர் நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பர்.

சில ராசிக்காரர்களுக்கு மற்றவர்களைப் பற்றி புறணி பேசும் பழக்கமும், ஏமாற்றும் குணம் கொண்டவர்களராகவும் இருப்பர். இதுப்போன்று ஒவ்வொரு ராசிக்காரர்களும வெவ்வேறான குணங்களைக் கொண்டு இருப்பார்கள்.

இந்த ராசிக்காரர்களிடம் ரகசியத்தை கூறினால் ஒரு போதும் வெளியே சொல்லமாட்டார்கள்.


விருச்சிகம்

உங்களது ரகசியத்தை பகிர்ந்து கொள்ள நினைத்தால், விருச்சிக ராசிக்காரர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.


இவர்களை நம்பி யார் எதை சொன்னாலும், அதை ரகசியமாக வைத்துக் கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே மற்றவர்களிடம் எதையும் அவ்வளவு எளிதில் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். அதிலும் இவரை நம்பி தங்களது ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டால், அவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே சொல்லமாட்டார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சத்தியத்தையும், ரகசியத்தையும் மதித்து நடப்பவர்கள். உங்களது ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால், இந்த ராசிக்காரர்களிடம் சொல்லலாம்.

இவர்கள் இயற்கையாகவே பொறுமைசாலி மற்றும் மற்றவர்களுக்கு உதவும் குணம அதிகம் கொண்டவர்கள்.

இவர்களது வாயில் இருந்து ஏதேனும் தகவலைப் பெற நினைத்தால், நிச்சயம் யாராலும் முடியாத ஒன்றாகவே இருக்கும். அந்த அளவில் இந்த ராசிக்காரர்கள் ரகசியத்தைப் பாதுகாப்பார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களும் ரகசியத்தைப் பாதுகாப்பார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்கள், தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், எப்பேற்பட்ட கஷ்டமான சூழ்நிலையிலும் உறுதுணையாக உங்கள் பக்கம் நிற்பார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் ஸ்மார்ட் மட்டுமின்றி, நம்பிக்கையுள்ளவர்களும் கூட. இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருப்பர்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் ரகசியத்தை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது மட்டுமின்றி, எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் அந்த விஷயத்தை மற்றவர்களுக்கு எதிராக பயன்படுத்தமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலி.

ஒருவரது ரகசியத்தை வெளியே கூறுவதால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்ல என்பதை நன்கு அறிந்து கொண்டவர்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு பொய் சொல்பவர்களைப் பிடிக்காது. எதிரியாக இருந்தாலும் உண்மையாக இருப்பர்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் தங்களிடம் வந்து ஒருவர் ரகசியத்தைக் கூறினால், சிறப்புரிமை உள்ளவர்களாக உணர்வதோடு, ரகசியத்தைக் காப்பதை பெருமையாகவும் நினைத்துக் கொள்வர்.

இந்த ராசிக்காரர்களுக்கு மற்றவர்களது ரகசியத்தை வெளியே கூறி நம்பிக்கையை உடைக்க அல்லது துறக்க விரும்பமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் உள்ளுணர்வுடன் இருப்பர். மீன ராசிக்காரர்களிடம் ரகசியத்தை ஒருவர் கூறினால், அந்த ரகசியம் அவர் இறந்தாலும் அவர்களுடனேயே சென்றுவிடுமே தவிர, வெளியே வராது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கிசுகிசு எப்படி ஒருவரை பெரிதாக பாதிக்கும் என்பது நன்கு தெரியும். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களது ரகசியத்தை ஒரு போதும் வெளியே சொல்லமாட்டார்கள் மற்றும் மிகவும் பத்திரமாக மனதிலேயே வைத்திருப்பார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமுள்ளவர்கள் மற்றும் அன்பானவர்கள். இவர்கள் ஒருவரது ரகசியத்தை வெளியே கூறி, தனது பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள்.

முக்கியமாக சிம்ம ராசிக்காரர்கள் கோபக்காரராக இருந்தாலும், தங்களுக்கு பிடித்தவர்கள் என்ன தான் தவறு செய்தாலும், அதை எளிதில் மன்னிக்கும் கருணை உள்ளம் கொண்டவர்கள்.

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக