சில வருடங்களுக்கு முன்பு நமது நம்பரை மாற்றாமலே வேறொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மாறுவது என்பது நிகழாத காரியமாக இருந்தது
ஆனால் 2010ம் ஆண்டு முதல் நமது நம்பரை மாற்றாமலே வேறொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மாறுவது அமல்படுத்தப்பட்டது இதன் மூலம் உங்கள் நம்பரை மாற்றாமல் சேவை நிறுவனத்தினை மாற்றி கொள்ள முடியும்
பொதுவாக ஒரு சேவை நிறுவனத்தில் இருந்து இன்னொரு சேவை நிறுவனத்திற்கு மாற பொதுவாக நான்கு முதல் ஏழு நாட்கள் வரை ஆகும்
தற்போது உள்ள இந்த நடைமுறையில் உள்ள காலத்தை குறைக்கும் விதமாக இனி ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு சேவை நிறுவனத்திற்கு மாற இரண்டு நாள் என்ற புதிய வழிமுறையை கொண்டு வந்துள்ளது
அதாவது இனி எந்த ஒரு சேவை நிறுவனத்திற்கும் இரண்டு நாட்களில் புதிய இணைப்பை பெறலாம்
அதே போல் சேவை நிறுவனத்தை விட்டு வெளியேற ஏற்படுத்தப்படும் போர்ட் கோட் (Port Code) இனி நான்கு நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும் இதற்கு முன் பதினைந்து நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக