Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

உங்களுக்கு இதுபோன்ற வலிகள் ஏற்பட்டால் அவற்றை சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

Image result for UDAL வலிகள்
கீழ்காணும் இதுபோன்ற கடுமையான வலிகள் ஏற்பட்டால் அவற்றி அலட்சியம் காட்ட வேண்டாம். சில வலிகள் பெரும் ஆபத்தின் எச்சரிக்கைகளாக வரும்.

அப்படிப்பட்ட வலிகள் இதோ...

1.. கடுமையான தலைவலி:

தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான் வலிக்கு உட்னே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

2.. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி...

பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதிரியான நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.

இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள்.

நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம். அனேக மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என் அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள். தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும்.

மேற்கண்ட வலியையும் அது உண்டான சூழலையும் பார்க்க வேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும் போது அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது ஆஞ்ஜைனாவாக (Angina) இருக்கலாம். சாதாரணமாக குளிர் காலங்களில் இது மோசமாகும்.

3.. கடுமையான வயிற்று வலி:

வயிற்றிலுள்ள குடல் வால் (appendix) பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் appendicitis எனப்படுகிறது. மருத்துவரிடம் சென்றால் அதை உடனே ஆப்பரேசன் செய்து எடுத்து விடுவார்கள்.

இல்லாவிட்டால் இந்த குடல் வால் உடைந்து பாக்டீரியாக்கள் மற்ற உள் உறுப்புகளுக்கு பரவி விடும். Gallbladder மற்றும் pancreas பாதிப்புகள்குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங்களாலும் வயிற்று வலி வரலாம்.

4.. கெண்டைக்கால் வலி:

கெண்டைக்கால் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.சில வேளை இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரை ஈரலில் கடும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.

5.. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி:

கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது சர்கரை நோயின் அடையாளமாக இருக்கலாம்.

6.. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி:

சிலருக்கு மனச்சோர்வு(dippression) காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்ல முடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் ” கழுத்து வலிக்கிறது ,கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது “என்று போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள்.

கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம். உரிய நேரத்தில் அதற்கான சிகிட்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும்,அதோடு மூளையையும் பாதித்து விடும்.

சின்ன வலி பெரிய வலி என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை தெரிந்து கொள்வது எப்போதும் நல்லது


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக