Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 9 ஜனவரி, 2019

ஐந்தறைப் பெட்டியின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்




கடுகு:

கடுகை பொதுவாக நாம் தாளிப்பதற்கு பயன்படுத்துகிறோம். இது ஜிரணத்திற்கு உதவுகிறது. ஒரு பிடி கடுகை சுத்தமான நீரில் அரைத்து 3 லிட்டர் நீரில் கலந்து கொதிக்கவைத்து இறக்கவும். இந்த நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி பொறுக்கும்படியான சூட்டில் இருகால் பாதங்களையும் அதில் படும்படியாக 10 நிமிடம் வைக்கவும். இதனால், தூக்கமின்மை, மனசோர்வு, பயம், படபடப்பு, சித்தப்பிரமை, அரட்டல், புரட்டல், மனக்குழப்பம் முதலியன நீங்கும்.



மிளகு:

நாம் பயன்படுத்தும் மசாலா பொருட்களில் மிகவும் பழமையானதும் முதன்மையானதும் மிளகாகும்.

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது பழமொழி. இது நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சுத்தன்மையை மாற்றிவிடும்.

1/4 டீஸ்பூன் மிளகுத்தூளை (வறுத்து அரைத்தது) 1 டம்ளர் நீர் மோருடன் கலந்து குடிக்க வாயுத்தொல்லை, வயிறு உப்பிசம், செரியாமை முதலியன நீங்கும்.

6 மிளகும், 4 பாதாம்பருப்பும் சாப்பிட்டு, 1 டம்ளர் பால் அருந்திவர நரம்புகள் வலுப்பெறும். மிளகையும் கல்லுப்பையும் சேர்த்து தூளாக்கி பற்களின் மேல்தடவ பல்லீறு ரணம், பல்வலி, ஈறுகளில் இரத்தம் வடிதல், பற்கூச்சம் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தி வர சிறந்த பலன் கிடைக்கும்.



சீரகம்:

“சிறு குழந்தை இல்லாத வீடும்

சீரகம் இல்லாத உணவும் சிறக்காது” என்பது பழமொழி.

சிறிதளவு சீரகத்தை வாயில் போட்டு மென்றால் குமட்டல், வாய்கசப்பு, தலைச்சுற்றல் நீங்குவதுடன் பசி ஏற்படும். 1 டீஸ்பூன் சீரகத்தை 1 டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி ஆறவைத்து இதனுடன் கொத்தமல்லியின் சாறு 1 டீஸ்பூன், சிறிதளவு உப்பு சேர்த்து தினம் காலை, இரவு உணவுக்கு பின் அருந்திவர வயிறு உப்பிசம், செரியாமை,வாந்தி பேதி முதலியன நீங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும்.

கருவுற்ற பெண்கள் சீரக கஷாயத்தை தேன் கலந்த பாலுடன் சேர்த்து தினம் ஒரு வேளை அருந்திவர கரு நன்கு வளரும். பிரசவம் சுலபமாகும். தாய்ப்பால் பெருகும்.



கருஞ்சீரகம்:

இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 30 கிராம் கருஞ்சீரகம் வறுத்தது, 30 கிராம் வறுக்காதது. இவை இரண்டையும் கலந்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும். 1 டீஸ்பூன் கருசீரகத்தூளை 1 டம்ளர் நீரில் கலந்து குடித்து வர மூல உபாதை குறையும். மேலும் இது நரம்பு மண்டலத்தை பற்றிய நோய்களையும் தீர்க்கும்.

1 டீஸ்பூன் கருஞ்சீரகத்தை  1 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து 1/2 டம்ளர் ஆகும் வரை  கொதிக்க விட்டு, வடிகட்டி மிதமான சூட்டில் ஆற விட்டு காலை வெறும் வயிற்றில் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.



வெந்தயம்:

வெந்தயம் வாய் முதல் மலவாய் வரை ஏற்படும் புண்களை ஆற்ற வல்லது. வெந்தயத்துடன் சமஅளவு கடுக்காய்ப்பூ சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும் வேளைக்கு 1/2 டீஸ்பூன் வீதம் உணவுக்கு முன்பு தினம் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டு நீர் அருந்திவர வாய்ப்புண், வயிற்றெரிச்சல், சீதபேதி, மூலநோய் குணமாகும்.

பொன்வறுவலாக வறுத்த வெந்தயம் 50 கிராம், கறி மஞ்சள் 50 கிராம், நெல்லிவற்றல் 50 கிராம் இவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும். காலை, மாலை என இருவேளைக்கு 1/2 டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு நீர் அருந்திவர சர்க்கரைநோய் கட்டுபடும்.

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து சிறிது உப்பும் சோம்பும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு நிற்கும்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களுக்கு தோன்றிய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம்


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!