Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

பப்பாளி கூட்டு


Papaya Kootu




தேவையான பொருட்கள்:
  •  பப்பாளிக்காய் – ஒன்று
  •  தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
  •  சீரகம் – ஒரு டீஸ்பூன்
  •  காய்ந்த மிளகாய் – 2
  •  பாசிப்பருப்பு – ஒரு கப்
  •  பெருங்காயத்தூள் – சிறிதளவு
  •  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரைடீஸ்பூன்
  •  எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  •  உப்பு – தேவையான அளவு                                Papaya Kootu                                                                                    செய்முறை:
     

    • பப்பாளிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். தேவையான உப்பு சேர்த்து வேகவைக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
    • காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய்த் துருவலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
    • இதனுடன் வேகவைத்த பப்பாளிக்காய், வேகவைத்த பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

    நன்மைகள்: 

    • சிறு நீர் போகும் குழாயில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் பப்பாளி உதவுகிறது. எலும்பு நல்ல முறையில் வளரவும் உபயோகமாகிறது. குழந்தைகளுக்கு பல் சரியாக வளராமல் இருந்தால் இப்பழத்தை சாப்பிட கொடுக்க வேண்டும். கண்கள் அழகாக இருக்கவும் இளமை நீடிக்கவும் பப்பாளிப்பழம் சிறந்தது. 
    • வாய், மூக்கு, உணவு மண்டலம், கழிவு மண்டலம் போன்ற பாகங்களில் உள்ள தோலிலும் சிலேட்டுமம் படலத்திலும் திசு பாதிப்புகள் நோய்க்கு பப்பாளி பெருமளவு பயன்படுகிறது. 
    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக