Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

படி ஏறுதல்

Climbing Stairs


அனைத்து வகையான பயிற்சியை விட, படி ஏறுதல் மிகவும் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது. ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ் மற்றும் இதர பயிற்சிகளில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும், உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும், இதயத்தைத் திடப்படுத்தவும் படி ஏறுவது தான் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரியப்படுத்தியுள்ளது. இப்போதெல்லாம் லிஃப்ட்டுகள் வேலை செய்யவில்லை என்றால் மட்டுமே அனைவரும் படிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் லிஃப்ட்களுக்கு பதிலாகப் படிகளை பயன்படுத்தினால் தான் நேர்மறையான பலப் பயன்களை நாம் பெறுகின்றோம்.



நன்மைகள்:

இதயம் மற்றும் நுரையீரலுக்கு நல்லது – படி ஏறுதல் உங்களைப்  பல விதத்தில் காக்கும். உதாரணத்திற்கு உங்கள் இதயம் மற்றும் நுரையீரலைப்  பாதுகாப்பாக வைத்திடும். திடமான நுரையீரல், அதிக அளவிலான ஆக்சிஜனை உள்ளிழுக்க உதவும். அதே போல் திடமான இதயம், ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தைத்  தசை நார்களுக்கு வேகமாக எடுத்துச் செல்ல உதவும். அதனால் நீங்களும் நன்றாக உணர்வீர்கள்.

உடல் எடைக்  குறையும் – படி ஏறுவதால் உடல் எடைக்  குறைந்து, உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படும்.

ஆயுளை அதிகரிக்கும் – படிகள் ஏறுவதால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும். அதே போல் உங்கள் தசைகள் திடமாகி வலுவடையும். அதனால் காயங்கள் ஏற்படும் இடர்பாடும் குறையும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கையின் தரத்தைப் பாதிக்கும் பல விதமான நோய்கள் ஏற்படும் இடர்பாட்டைக்  குறைக்கும்.

கால்களை வலுவாக்கும் – உங்கள் கால்கள் மற்றும் பின்புறத்தின் தசைகளின் திடத்தை மேம்படுத்தும்.
மன அழுத்தத்தைத் தடுக்கும் – தினமும் மாடிப்படிகளைப் பயன்படுத்தினால், மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
நல்ல தூக்கம் – தினமும் படிகளைப் பயன்படுத்தும் போது, இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கான உடற்பயிற்சி – மாடிப்படிகளை ஏறுவது, மருத்துவரின் அறிவுரையுடன் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறந்த உடற்பயிற்சி என்றும் கூறலாம்.

சர்க்கரை நோயைக்  கட்டுப்படுத்தும் – நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்குவித்து, டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் தீவிரமான பிற நோய்கள் ஏற்படும் இடர்பாட்டை குறைக்கும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக