Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 பிப்ரவரி, 2019

பாகற்காய் பிட்லை

Bitter gourd Pitlai


தேவையான பொருட்கள்:
 பாகற்காய் – 200 கிராம்
 புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
 துவரம்பருப்பு – 100 கிராம்
 கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் – ஒன்று
 சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் – ஒரு கப்
 கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

Bitter gourd Pitlai


செய்முறை:

  • துவரம்பருப்பை நன்கு வேகவைக்கவும். பாகற்காயை வில்லைகளாக நறுக்கி தண்ணீரில் வேகவைக்கவும். சிறிது வெந்த உடன் தண்ணீரை வடிக்கவும்.
  • கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வேகவைத்த பாகற்காயை சேர்க்கவும்.
  • பின்னர், அரைத்து வைத்திருக்கும் விழுது, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கினால். பாகற்காய் பிட்லை தயார்

நன்மைகள்:


  • பாகற்காயில் அதிக கசப்பு தன்மை கொண்டது. பாகற்காய் இது உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை முற்றிலும் அழிக்க உதவுகிறது.
  • நீரிழிவு நோயிகளுக்கு பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் அந்த நோயை முற்றிலும் குணமாக்கலாம் என கூறப்படுகிறது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!