Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 பிப்ரவரி, 2019

தோப்புக்கரணம்

Thoopukarnam


செய்யும் முறை: 
    நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.

  • இரு கால்களுக்கும் நடுவே தோள்பட்டை நீளம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
  • இடது கையால் வலது காதுமடலைப் பிடிக்கவும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும்.
  • அதே போல் வலது கையால் இடது காதைப் பிடிக்க வேண்டும். வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.
  • தலை நேராய் பார்த்தபடியே முச்சுக் காற்றை விட்டபடியே உட்கார வேண்டும். சிரமம் இல்லாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உட்கார வேண்டும்.
  • மூச்சை இழுத்துக்கொண்டே எழவேண்டும். வேகமாக செய்யக் கூடாது. பொறுமையாகச் செய்ய வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்.

மேலைநாட்டு மருத்தவ ஆராய்ச்சிகளும் சிபாரிசுகளும்: ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறத் தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு.போட வைப்பது வாடிக்கை.

 பரீட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து  ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
தோப்புக்கரணம்  செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில்  ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

தோப்புக்கரணம் போடுவதன் பயன்கள்:


  • மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன.
  • இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.
  • நாடிகள் சுத்தம் பெறுகின்றன.
  • நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள், தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக