தேவையான பொருட்கள்:
· வெள்ளைச் சோளம் – ஒரு கப்
· குண்டு உளுந்து – அரை கப்
· வெந்தயம் – 2 மேசைக்கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை:
·
குண்டு உளுந்தை நன்றாகக் கழுவி மூழ்கும் அளவு நீர் ஊற்றி தோராயமாக ஒரு மணி நேரம் ஊறவிடவும். வெந்தயத்தை தனியாக ஊற வைக்கவும். சோளத்தை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். (சோளம் கடினத் தன்மையுடையதால் ஊறுவதற்கு குறைந்தது ஆறு மணி நேரமாகும். வெந்நீரில் ஊறவைத்தால் நேரம் சற்று குறையலாம்).
·
சோளம் ஊறியதும் மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் இரண்டு மூன்று சுற்றுகள் அரைக்கவும். பிறகு நீர் விட்டு நன்கு
அரைத்துக் கொள்ளவும்.
·
உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக நன்றாக
அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
·
அரைத்த மாவு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து உப்புப்
போட்டு நன்றாகக் கலந்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும்.
.
·
மாவு புளித்ததும் தோசைக்கல்லை சூடாக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.சுவையான சோள தோசை தயார்.
நன்மைகள்:
·
அரிசி சார்ந்த உணவை விட சோள உணவு
·
சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. மேலும் சோளம்
·
இதய நோய்கள், ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு
·
நோய் வருவதையும் குறைக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின்
மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின்
பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து
கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக