Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மார்ச், 2019

டைனாசர் 5 - இனப்பெருக்கமும் குட்டிகள் வளர்ப்பும்



டைனாசர்கள் தங்கள் இனத்தை பெருக்கி எவ்வாறு குட்டிகளை வளர்த்தன என்பது உயிரியல் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக அமைந்த ஒன்றாகும்.1920 ஆண்டு வரை கூட டைனாசர்கள் ஊர்வன மற்றும் பறப்பன போல முட்டை இட்டனவா அல்லது பாலூட்டிகளை போல குழந்தை பெற்றனவா என்பதில் மிகுந்த ஐயப்பாடு கொண்டிருந்தனர். டைனாசர் முட்டைகளின் எச்சத்தை கண்டறிந்த பின்பு தான் டைனாசர்கள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்தன என்பதை அனுமானித்தார்கள்.



கூடுகள் :
பல ஆண்டுகள் டைனாசர்கள் முட்டையை இட்டுவிட்டு ஓடி சென்று விட்டன என்றே வல்லுனர்களால் நம்பப் பட்டது. இந்தக் கருத்து 1970ல் புகழ் பெற்ற எச்ச வல்லுநர் ஜாக் ஹார்னர்கூடுகள் அடங்கிய மைதானங்களை கண்டு பிடித்த போது தான் மாறியது. அவ்வாறு அவர் கண்டு பிடித்த கூடுகள் "மையாசாரா" ( கிரேக்க மொழியில் நல்ல அன்னை பல்லி ) என்னும் டைனாசாரை சேர்ந்தது என்ற தகவலை அவர் வெளியிட்டார்.   



"ப்ரோடோசெராடப்ஸ்" என்னும் சிறிய டைனாசர் ஒரு பன்றியின் அளவே இருந்தன. பெரும்பாலும் இவைகள் பாலைவனத்தில் காணப் பட்டன. இந்த இனத்தை சேர்ந்த பெண் டைனாசர்வெதுவெதுப்பான மணலில் குவளை வடிவ கூடு அமைத்து அதில் முட்டைகள் பொரித்தன.


முட்டைகள் :
டைனாசர்கள் ஒரே சமயத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இட்டன. ட்ரையாசிக்ஜுராசிக் மற்றும் கிரேடேசியாஸ் காலத்தில் அவைகளின் முட்டை எச்சங்களின் எண்ணிக்கையை வைத்து ஆராய்ந்தால்டைனாசர்களின் எண்ணிக்கையை விடு முட்டைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருந்தன என்பது வல்லுனர்களின் அனுமானம்.





ஒரு சிறிய கணக்கின் மூலம் இதை மேலும் அலசுவோம்
 :
டைனாசர் வாழ்ந்த எந்த ஒரு வருடத்தை எடுத்து கொண்டாலும் கோடி கணக்கான டைனாசர்கள் பூமியில் உலவின என்பது உண்மை. அவற்றில் வளர்ந்த பெண் டைனாசர்கள் ஒரு முறைக்கு சுமார் 30 முட்டைகள் வரை இட்டன. இப்படி கணக்கிட்டு பார்த்தால் தர்க்க ரீதியாகவே தற்போது உள்ள கோழி முட்டைகளின் எண்ணிக்கையை விட டைனாசர் முட்டைகளின் எண்ணிக்கை பலமடங்காக இருந்திருக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.




குட்டிகள் :
மனித குழந்தைகளைக் காட்டிலும் டைனாசர் குட்டிகள் ஐந்து மடங்கு வேகமாக வளர்ந்தன. உதாரணத்திற்கு டிப்லோடாகஸ் டைனாசர் குட்டி முட்டையிலிருந்து வெளிப்படும் போதே 30 கிலோ எடையும் ஒரு மீட்டர் அளவு உடம்பும் கொண்டிருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !



டைனாசர்கள் தங்கள் குட்டிகளை பாதுகாத்தனவா ?
குட்டிகள் தாமாக தன்னை கவனித்துகொள்ளும் வயது அடையும் வரை பெற்றோர்களால் அவைகள் பாதுகாக்கப்பட்டன. "மையாசோரா" எனும் டைனாசர்கள் தங்கள் குட்டிகளுக்காக உணவு சேகரித்துபறவைகள் அதனை ஊட்டி விடுவது போலவே ஊட்டியும் விட்டன. பெரிய டைனாசர்கள் தங்கள் குட்டிகளை ஆபத்திலிருந்தும் பாதுகாத்தன.





ஆயினும் எல்லா தாவர உண்ணி டைனாசர்களும் குட்டிகளை கவனமாக தான் பார்த்து கொண்டன என்று கூற இயலாது. உதாரணத்திற்கு "சாரோபாட்ஸ்" எனும் டைனாசர்தன் குட்டியை அரவணைக்காது. ஏனென்றால் ௧௨ இஞ்ச அளவே உள்ள குட்டி தன் பெரிய கால்களால் நசுக்கப் பட்டுவிடும் என்ற அச்சம் தான் காரணம்.  இது போன்ற சூழ்நிலையில் அக்குட்டிகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொண்டன. ஆயினும் இவ்வாறு தனியாக காணப்படும் குட்டிகளை பசியுள்ள - "தேரோபாட்ஸ்" கவ்விக் கொண்டு செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.







என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக