ஒரு காரமான ஆனால்
இனிப்பான, ருசியான
துணைக்கறி சர்க்கரை வள்ளிகிழங்கு பொரியல் ஆகும். சூடான ரசம் சாதத்துடன் அருமையாக
சுவைக்கும் இதை கண்டிப்பாக செய்து பார்க்குமாறு
பரிந்துரைக்கிறேன்.
தேவையான
பொருள்கள் :
சர்க்கரை வள்ளி கிழங்கு – ¼ கிலோ
சமையல் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 ; சன்னமாக
நறுக்கியது
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் - 4 ; பாதியாக
நறுக்கப்பட்டது
கடுகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
பெருங்காயம் – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி தழை - கை
அளவு ; சன்னமாக
அரிந்தது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1) வள்ளிக்கிழங்கை
கழுவி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்
2) ஒரு
வாணலியில் எண்ணையை சூடாக்கி கடுகு சீரகம் தாளிக்கவும்
3) அவை
வெடித்தவுடன், பூண்டு
காய்ந்த மிளகாய் சேர்க்கவும்
4) பிறகு
நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை
மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்
5) வெங்காயம்
பொன்னிறம் ஆகும்வரை 2-3 நிமிடங்கள் சமைக்கவும்
6) வள்ளிகிழங்கு
துண்டுகளையும் மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும்.
7) சிறிது
நேரம் நன்றாக வதக்கி, மூடி போட்டு 3-4நிமிடம்
சமைக்கவும்
8) ½ கப்
நீர் தெளித்து கிழங்கு வேகும் வரை சமைக்கவும்
9) மூடியை
திறந்து, நீர்
வற்றும் வரை சமைத்து, சிறு தீயில் 10 நிமிடம் பிரட்டி விடவும்
10)சிறிது
பொன்னிறமாக வறுபட்டதும், மல்லி தழை தூவி
பரிமாறவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக