Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 மார்ச், 2019

ஃபெங் ஷூயி கலையை பழகுவது எப்படி ?



Image result for Feng Shui


கலை மற்றும் விஞ்ஞானத்தில் மிக புராதனமான விளங்கும் ஃபெங் ஷூயியை பற்றி விரிவாக உரைக்கும் முன்ஒரு சிலவார்த்தைகள் கூற விழைகிறோம்.


சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவில் இக்கலைஉருவாக்கி வளர்க்கப்பட்டதுசீன மொழியில் ஃபெங் என்றால்காற்று ஷூயி என்றால் நீர் என்று அர்த்தம். ஆக ஃபெங்ஷூயிஎன்பது அமைக்க பெற்ற இடத்தில் இவ்விரு ஆக்க சக்திகளின்சமன்பட்ட வெளிப்பாடாகும்இதன் மூலம் நல்லஆரோக்கியமும் வளமான எதிர்காலமும் உருவாகும் என்பதுஇக்கலையின் அடிப்படை நம்பிக்கை.



இனி நாம் ஃபெங்ஷூயியில் பின்பற்றப்படும் ஐந்து முக்கியவழக்கங்களை 
பற்றி தெரிந்து கொள்வோமாக.



அசுத்தத்தை நீக்கு

நம் வீட்டில் கேள்வி கேப்பாரின்றி இறைந்து கிடக்கும் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்துதல் மிக்க அவசியம் ஆகும். இதனால்வீடு பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பதுடன்,சுத்தமாக இல்லையே என்று எண்ணி வாடும், தேவை இல்லாத தலைவலி நீங்கும்.

இதை அடிக்கடி செய்வதால்நம் உடல் எடையும் குறைந்து ஆரோக்கியம் கூடும்.


சுத்தமான வீடு தான் ராசியான வீடு என்று ஃபெங் ஷுயி கருதுகிறது.


உங்களுக்கு பிடிக்காத எந்த விஷயம் ஆனாலும்,மறுபரிசீலனை செய்யாமல் நீக்கி விடவும்.


உடைந்த பொருள்கள்பழுது பார்த்து மீண்டும் உபயோகிக்கலாம் என்று எண்ணி சேமித்து வைத்துள்ள தேவை இல்லாத பொருள்கள்பழுது பார்த்தாலும் பிரயோஜனம் இல்லை என நீங்கள் கருதும் பொருள்கள்ஆகியவற்றை கண்டிப்பாக நீக்க வேண்டும்.




இல்லத்தை
 ஒளியூட்டு

நம் இல்லத்தில் இயற்கை ஒளி படர நாம் என்ன வழிசெய்தாலும்அது நம் மனதின் உற்சாகத்திற்கு உகந்ததாகும்.


பகல் வேளையில் வீட்டினுள் இயற்கையான ஒளியும், அந்தஒளியின் ஆற்றலும் நன்கு புகுமாறு கதவு மற்றும்ஜன்னல்களை திறந்து வையுங்கள்.


தங்கள் ரசனைக்கு ஏற்ற வண்ணங்களை கொண்டுஇல்லத்தை அலங்கரியுங்கள்.


தங்களுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிக்கும்நிறங்களை கொண்டு வீட்டின் உட்புற சுவர்களை பளிச்சிடசெய்யுங்கள்.


ஆனால் வெளிப்புற சுவர்களில் வண்ணம் பூசுகையில்மூன்று நிறங்களுக்கு மேல் பயன் படுத்தாதீர்கள்.




இயற்கையை போற்று

தங்களால் பராமரிக்க முடிந்த சீரிய செடிகளை வளருங்கள்.


தாவரங்களை இயற்கைவளர்ச்சிஆக்கத்திறன் மற்றும் காற்றைசுத்தீகரிக்கும் ஒரு அருமையான வாய்ப்பு நல்கும் ஒரு இனிய பெட்டகம்என்று கூறினால் அது மிகையில்லை .


இயற்கை எப்போதும் நம் ஆக்கத்திறனை சீரமைத்து நம்மைமுழுமை பெறச்செய்யும்  வல்லமை படைத்தது.


வளர்ப்பு பிராணிகள் மற்றும் பறவைகளும் நாம் வளர்க்கலாம்.ஏனென்றால் எந்த ஒரு உயிரோட்டமுள்ள ஜீவனும் நமக்குஜீவாதாரமான ஆக்கசக்தியை வழங்க முடியும் என்பது ஃபெங்ஷூயிகலையின் நம்பிக்கை ஆகும்




அறைகலன்களை சரியாக இடவமர்த்து

வீட்டின் நுழைவாயில் மூலம் தான்  நம் வாழ்க்கையில் நல்வாய்ப்புகள் வரும் என்று கருதப்படுகின்றதுஆகையால் நம்வாசலில்ஊக்கம் அளிக்கும் விதமாக நல்ல வாசல் விரிப்பு,பச்சை நிற குடம் அல்லது அழகிய மலர்தொட்டி வைப்பதுமிகவும் உகந்தது.


வீட்டின் முக்கியமான கலன்களை அமர்ந்திருக்கும்இடத்திலிருந்து நுழைவாயில் பார்வையில் தெரியும் வண்ணம்,ஆளுமை நிறைந்த பகுதியில் அமர்த்துங்கள்.  ஆனால்வாசலுக்கு நேர் நோக்கி இருத்தல் வேண்டாம்.


கூர்மையான கோணங்கள் தீய சக்தியை உருவாக்கும். ஆகையால் உங்களை நோக்கி ஏதேனும் கூரிய பகுதிஅமைக்கபெற்றால் அதன் நுனி உங்கள் மீது தீய சக்தியைசெலுத்தும் என்பது ஒரு ஃபெங்ஷூயி நம்பிக்கை.


உங்கள் படுக்கை அறையிலிருந்து டிவிகணிப்பொறி ஆகியமின் சாதனங்களை நீக்கிவிடுங்கள்.




சாக்கடைகளை பராமரி

வீட்டின் சாக்கடை வடிகால் நன்கு பராமரிக்கப்படவேண்டும்அதன் மூலமாக தான் வீட்டின் அனைத்து அசுத்ததீய சக்திகள் விலகுகின்றன.


அதேபோல் கழிவுதொட்டியை திறந்த வண்ணம்வைத்திருந்தால் இல்லத்தின் ஆக்கசக்திகள் அதன் மூலம்வெளியேறி விடும்.


படுக்கை அறையை ஒட்டி அமைந்துள்ள கழிவறையின்கதவுகள் எப்போதும் , குறிப்பாக இரவு நேரத்தில்மூடப்பட்டிருக்க வேண்டும்அப்படி இருந்தால் தான் படுக்கைஅறையின் ஆக்க சக்தியை கழிவறையின் தீய சக்தியிலிருந்துபிரித்து வைத்திருக்க முடியும்.




எல்லாவற்றிற்கும்
 மேலாக தங்களை ஊக்க சிந்தனையின்ஒளியுடன் எப்போதும் வைத்திருங்கள்அவ்வாறு இருத்தல்உங்களை மட்டும் அல்ல உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும்மகிழ்ச்சியை அளித்து துன்பங்களை அகற்றும்உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றுவதை மட்டுமே செய்யுங்கள்.



ஃபெங்ஷூயி என்பது ஒரு மாய வித்தை அல்லஅது உங்கள்செல்வம், அறிவாற்றல் மற்றும் நேரத்தை சமசீராக மாற்றஉதவும் ஒரு சிறிய முதலீடாகும். ஃபெங்ஷூயி கலையை பழகிபாருங்கள். ஒரு சிறிய திருத்தம் பல வலிய 
மாற்றங்களைஅளிக்க முடியும் என்பதை கண்கூடாகக் காண்பீர்கள்.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக