Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 28 மார்ச், 2019

சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்!






தேவையான பொருட்கள்:
  • சில்பகார் – 1 பாக்கெட்
  • அக்ரலிக் நிறங்கள் – ப்ளூ, கோல்டு
  • பிரஷ்
  • கத்திரிகோல்
  • முகப்பவுடர்

எப்படி செய்வது?
சில்பகார் என்பது ரெடிமேட் செராமிக் கலவை. ஒரு பாக்கெட்டில் இரண்டு வகையான கலவையை கொடுத்திருப்பார்கள். பேக் செய்யப்பட்டிருக்கும் இரண்டையும் பிரித்து சம அளவில் எடுத்துக்கொண்டு, ஈரம் காய்வதற்குள் நன்றாக பிசையவும்.



பிசைந்த கலவையில் அரை மணி நேரத்துக்குள் தேவையான உருவங்களை செய்துகொள்ளலாம். பின்னர் கலவை இறுகிப் போய்விடும். நீரில் கரைத்தாலும் கரையாது; அதன் மேல் பெயிண்டும் செய்யலாம்.


கலவை கைகளில் ஒட்டாமல் இருக்க, அவ்வவ்போது சிறிதளவு பவுடர் தொட்டுக்கொள்ளுங்கள். நன்றாக பிசைந்த கலவையில் ஒரு பகுதியை எடுத்து உருட்டிக்கொள்ளுகள்.




உருட்டியதை அப்படியே பேப்பரில் வைத்து கூம்பாக நிறுத்துங்கள்.
கூம்பின் முனைகளை கத்திரிக்கோலால் நான்காக வெட்டுங்கள். வெட்டியதை இதழ்போல விரிக்கவும்.

DSCN6180DSCN6178DSCN6169

 இதழ்களுக்கிடையே, ஊதுபத்தி சொருக, பிரஷ்ஷின் பின்பக்கத்தைக் கொண்டு அழுத்தி எடுங்கள்.







அதேபோல், கீழிருக்கும் பகுதியில் பிரஷ்ஷால் அழுத்தங்களை கொடுத்து டிசைனை உருவாக்குங்கள்.






சற்றே உலரவிட்டு, ப்ளு மற்றும் கோல்டன் நிறங்களைக் கொண்டு வண்ணம் பூசுங்கள். உலரவிட்டு பயன்படுத்தலாம் நீங்களே செய்த ஊதுபத்தி ஸ்டாண்ட் !



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!