
தேவையானவை:
அன்னாசிப்
பழம் – கால் பாகம்
ரவை – 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – கால் கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
அன்னாசி எசன்ஸ் – 2 டீஸ்பூன்
ஃபுட் கலர் (மஞ்சள்) – கால் டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 6.
ரவை – 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – கால் கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
அன்னாசி எசன்ஸ் – 2 டீஸ்பூன்
ஃபுட் கலர் (மஞ்சள்) – கால் டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 6.
செய்முறை:
அன்னாசிப்
பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை கலந்து, அரை மணி
நேரம் வையுங்கள். ரவையை 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய்,
எண்ணெயை காய வைத்து முந்திரிப்பருப்பைப் போட்டு தாளித்து, 3 கப் தண்ணீர்
சேருங்கள். அதில் மஞ்சள் கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையைச்
சேர்த்து கட்டி படாமல் கிளறுங்கள். நன்கு கிளறியபின், தீயைக் குறைத்து 5 நிமிடம்
நன்கு வேகவிடுங்கள்.
பின்னர்
அன்னாசி, சர்க்கரை கலவையையும் அதில் சேருங்கள். இது சற்று இளகி, மீண்டும்
கெட்டிப்படும். அதை நன்கு கிளறி, எசன்ஸ் சேர்த்து கலந்து பரிமாறுங்கள்.
விருந்துகளுக்கு ஏற்ற, சுவையான ஸ்வீட் இது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக