Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 28 மார்ச், 2019

தொடாமலேயே பண பரிவர்த்தனை

Image result for contactless card




சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானதுநண்பர் ஒருவர் அதை எனக்கு வாட்ஸப்பியிருந்தார்கூடவே “இதெல்லாம் சாத்தியமா ?” என ஒரு கேள்வியும் கேட்டிருந்தார்
அந்த வீடியோவில் ஒருவர் தனது கடன் அட்டையை பர்ஸில் வைத்திருக்கிறார்அப்போது பி..எஸ் மெஷினுடன் ஒருவர் அவரருகில் வருகிறார்அவரது பர்ஸின் அருகே அந்த மெஷினைக் கொண்டு சென்றதும் அவரது கார்டிலிருந்து பணம் எடுக்கும் அனுமதி கருவிக்குக் கிடைக்கிறதுஅதில் அவர் 100 ரூபாய் என தட்டுகிறார்ஓகே சொல்கிறார்
பர்ஸ் வைத்திருக்கும் நபருக்கு இந்த விஷயம் எதுவுமே தெரியவில்லைசத்தமில்லாமல் ஒரு பணப் பரிவர்த்தனை அங்கே நடந்து முடிந்து விட்டதுஇப்படி ஒரு விஷயம் நடக்க சாத்தியமா என்பதே அவர் கேட்டிருந்த கேள்விஇதே வீடியோவைப் பார்த்த எனது இன்னொரு நண்பர் “இதெல்லாம் சாத்தியமே இல்லைசும்மா மக்களை அச்சுறுத்துவதற்காக இப்படியெல்லாம் அனுப்பறாங்க” என்றார்
கேள்விகளுக்கான சுருக்கமான பதில்இது சாத்தியம் என்பது தான்.
சாத்தியம் என்பதை விடஇது ஒரு புதிய தொழில்நுட்பம் என்பது தான் சரியாக இருக்கும்ஒரு கார்டைப் பயன்படுத்தும்போது அதற்கு நாம் பின் நம்பரைக் கொடுக்க வேண்டும்அல்லது ஓ.டி.பி கொடுக்க வேண்டும்அல்லது பாஸ்வேர்டைக் கொடுக்க வேண்டும்இது தான் சாதாரண வழக்கம்ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே ஒரு கார்டைப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசித்ததன் விளைவு தான் இந்தப் புதிய தொழில்நுட்பம்
இதை காண்டாக்ட்லெஸ் கார்ட் ( cotactless card ) என்பார்கள்அதாவது தொடர்பு ஏற்படுத்தத் தேவையில்லாத அட்டைஇந்த தொழில்நுட்பத்தை  Tap and go என்பார்கள்தமிழில் “தட்டிச் செல்” என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது மக்களுக்கு எல்லாமே படு விரைவில் கிடைக்க வேண்டும்முன்பெல்லாம் ஆயிரம் ரூபாய் பணம் தேவையெனில் வங்கிக்குச் சென்று டோக்கன் வாங்கி ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்இப்போது ஏடிஎம் பணத்தைத் தர இரண்டு வினாடிகள் தாமதித்தால் மக்கள் பொறுமை இழந்து விடுகிறார்கள்மொபைலில் ஒரு ஆப் ஓப்பன் பண்ண நாலு வினாடி தாமதித்தால் பதட்டமடைந்து விடுகிறார்கள்ஆன்லைனில் ஒரு வெப்சைட் கொஞ்சம் மெதுவாக லோட் ஆனால் லேப்டாப்பை நாலு தட்டு தட்டுகிறார்கள்.
எல்லாமே மிக வேகமாகக் கிடைக்க வேண்டும் எனும் மனநிலை இன்று உருவாகிவிட்டதுசாப்பிடுவதற்கு ஃபாஸ்ட் புட் , உடலை இளைக்க வைக்க கிரேஷ் டயட்பயணத்துக்கு அதிவேகம் என வாழ்க்கை வேகத்தின் பக்கமாகச் சாய்ந்து விட்டது
அது தான் தொழில்நுட்பத்திலும் எதிரொலிக்கிறதுஅட்டையைப் பயன்படுத்த வேண்டும்ஆனால் கார்டை வெளியே எடுத்துகருவியில் சொருகிபின் நம்பர் கொடுத்துஓகே சொல்லி.. இப்படி பல செயல்களைச் செய்யக் கூடாதுஎன்ன செய்யலாம் ? என யோசித்தவர்களுக்கு உதித்த ஐடியா தான் இந்த காண்டாக்ட்லெஸ் கார்ட்.
இது நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் எனப்படும் (Near field communication ) அருகாமைத் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதுஇந்த தொழில்நுட்பத்தின் மூலம் கார்டும்கருவியும் அருகருகே இருக்கும் போது பயனர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் பரிவர்த்தனையை நடத்தி விட முடியும்.
நீங்கள் பயப்படும் முன் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்இது எல்லா கார்ட்களிலும் உள்ள வசதி அல்லநீங்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் டெபிட்கிரடிட் கார்ட்களில் இந்த வசதி இருக்காதுஉங்களுடைய கார்டை எடுத்துப் பாருங்கள்அதில் என்.எஃப்.சி குறியீடு (வைஃபை சிம்பல் போல ) இருந்தால் அந்த கார்ட் இந்த காண்டாக்ட்லெஸ் வகையைச் சார்ந்தது என புரிந்து கொள்ளலாம்இல்லையேல் அது சாதாரண கார்ட்
அது போலஎல்லா பி..எஸ் மெஷின்களை வைத்தும் இந்த பரிவர்த்தனையைச் செய்ய முடியாதுஅதற்கு இந்த என்.எஃப்.சி சிம்பல் போட்ட மெஷின்கள் தேவை
முதலில் இந்த வகைப் பரிவர்த்தனைகளுக்கென தனியே ஒரு கார்ட் வகையை வைத்திருந்தார்கள்ஆனால் இப்போது கிரடிட்டெபிட் கார்ட்களில் இந்த நுட்பத்தை விசா போன்ற நிறுவனங்கள் நுழைத்து விட்டனஎனினும் இந்த வகைப் பரிவர்த்தனைகளுக்கென ஒரு வரம்பு வைத்திருக்கின்றனர்.  அதிகபட்சம் ஒரு பரிவர்த்தனைக்கு 2000 ரூபாய்கள் என்பது பொதுவான வரையறைகூடவே ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நமக்கு எஸ்.எம்.எஸ் கிடைக்கும் வசதிகளையும் செய்து தருகின்றன
வெளிநாடுகளில் பார் , சூதாட்டம் போன்ற கேளிக்கை விடுதிகளில் இந்த வகை அட்டைகளைப் பெருமளவில் பயன்படுத்துவார்கள்பரிமாறுபவர்களே கருவியையும் கொண்டு வந்து செல்லமாய் ஒரு தட்டு தட்டி விட்டு பணத்தைப் பெற்றுச் சென்று விடுவார்கள்
இந்தியா போன்ற நாடுகளில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்ரயில் நிலையம்கடைவீதிதிரையரங்குகள்ஷாப்பிங் நிலையங்கள் போன்ற இடங்களில் ஒருவர் சும்மா ஒரு பி..ஓஸ் மெஷினை கொண்டு நடந்தாலே எளிதாக டிஜிடல் பிக்பாக்கெட் அடிக்க முடியும்சின்னச் சின்னதாய் நிறைய பரிவர்த்தனைகள் செய்து நம்மை மொட்டையடிக்கவும் முடியும்
சாதாரண கார்ட்களைப் பயன்படுத்தும் போது நமது வங்கிக் கணக்குஅதன் தகவல்கள்பேலன்ஸ் போன்ற அனைத்தையும் பேய்மெண்ட் சுவிட்ச் பரிசோதனை செய்த பின்பே ஒரு பரிவர்த்தனை அங்கீகரிக்கப்படும்ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் அவை எதுவும் இல்லைஇத்தகைய பரிவர்த்தனைகளெல்லாம் நாளின் இறுதியில் கடைக்காரரே வங்கிக்கு அனுப்புவார்அங்கு சரி பார்க்கப்பட்டு செட்டில்மெண்ட் செய்யப்படும்
வெளிநாடுகளில் பிரபலமாக இருந்தாலும் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் இன்னும் பிரபலமடையவில்லைபாதுகாப்பானது என்பது உறுதியானால் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பங்களை நாம் அங்கீகரிக்கிறோம்இன்னும் க்யூஆர் கோட் கூட அதிக அளவில் இந்தியாவில் பயன்படுத்தப்படவில்லையூபிஐ போன்ற அரசு தொழில்நுட்பங்களையே இப்போது தான் பரீட்சித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்
எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முன்பும்அதைப் பற்றிய முழுமையான புரிதலைக் கொண்டிருங்கள்அது உங்களை எச்சரிக்கையாய் இருக்க வைக்கும்

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!