Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மார்ச், 2019

இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்



Image result for விளாம்பழம்


அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுபவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவர குணமாகும். வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுத்தால் கூட இதைச் சாப்பிடலாம் .
ஏனெனில் இதயத்துக்கும் பாதுகாப்பு, தாகமும் தீரும்.. இப்பழத்திலிருந்து கல்லீரல் மற்றும் இதய கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இது பழுக்காத போது துவர்ப்பாக இருக்கும். இது வயிற்றுபோக்கையும், வயிற்றுக்கடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது. 
இதுவிக்கலுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. தொண்டை புண்னை இதனுடைய கோந்து சரி செய்கிறது. இதனுடைய சதை வீக்கத்திற்கு வைத்து கட்டுகிறார்கள்.
 விஷப்பூச்சிகள் கடித்தால் பழ ஓட்டின் பவுடரை அரைத்து பூசுவதால் சரியாகிறது. பெரும் பயன் தரும் பழங்களில் இது ஒன்று. அடிக்கடி மார்பில் வலி ஏற்பட்டால், உங்கள் வயிற்றில் புளிப்பு தன்மையுடைய நீர் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். இதைப்போக்க இஞ்சியும், எலுமிச்சம்பழமும் உணவில் நிறைய சேர்த்துக்கொள்ளவும். அதன்பிறகு மார்பு வலி வராது. 
அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக்கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும். 
மாரடைப்பு, இதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்த்துக் கொள்ளவும். கடலைப்பருப்பையும் அடிக்கடி உணவில் சேர்த்த்துக் கொள்ளவும். பூண்டைப் போட்டு காய்ச்சியும் பருகி வரலாம். 
மார்பில் நமநம என்று வலி ஏற்பட்டு தொந்தரவு வரும்போது செம்பரத்தம்பூ கஷாயம் மிகவும் நல்லது. பூக்களை சுத்தம்செய்து, சுண்டும்படியாக கஷாயம் வைத்து, பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், மார்புவலி இருக்காதுஇருந்த வலியும் நின்றுபோகும். 
குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக் கொண்டு, சமமாகச் சர்க்கரை சேர்த்து, 200 மில்லி பசும்பாலில் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டு வரவும். இவ்வாறு 15 நாட்கள் சாப்பிட்டால், மார்பு வலி நீங்கி தேகத்திற்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மேலும் உடல் வனப்பு உண்டாகும். 
நெஞ்சுவலி வந்தால், போரீச்சம்பழத்தை அப்படியே கொட்டையுடன் இடித்துப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக மென்று விழுங்குங்கள். அதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. அதனால் நெஞ்சுவலியை எளிதில் குணப்படுத்தும். 



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக