Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 மார்ச், 2019

ரஃபேல் - நடந்தது என்ன?

Image result for ரஃபேல்



The Hindu N.Ram அவர்களின் பேட்டி #BBC நடத்திய நேர்காணல் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் காணாமல் போனதாக சொன்ன ரஃபேல் ஆவணங்களை வெளியிட்டவர் N.ராம் தான் .

#கேள்வி: இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது?
#பதில்: இந்த விவகாரம் தொடர்பாக தி ஹிந்துவில் இதுவரை மூன்று கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இது தொடர்பாக சில ஆவணங்களை விளக்கியிருக்கிறோம். இதில் நாங்கள் கண்டுபிடித்தவற்றை சொல்கிறேன்.

முதலாவதாக ரஃபேல் விமானங்களின் விலை. இந்த விமானங்களை வாங்குவதற்கான ஆயத்தப் பணிகள் 2007லேயே துவங்கிவிட்டன.

2012ல் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. 2016ல் திடீரென எல்லாவற்றையும் மாற்றி, 126 விமானங்களுக்குப் பதிலாக 36 வாங்கலாம் என முடிவுசெய்தார்கள்.

தவிர, #உள்நாட்டு உற்பத்தியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் மேற்கொள்ளும் என்பதும் ரத்துசெய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஒரு விமானத்தின் விலை மிகவும் அதிகரித்துவிட்டது. அது ஏன் என்று பார்க்கலாம். அந்த விமானத்தில் இந்தியாவுக்குத் தேவையான 13 சிறப்பம்சங்களைச் செய்ய வேண்டும்.

இதற்காக அந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக 1.4 பில்லியன் யூரோ தேவை என்றார்கள். பிறகு அது 1.3 பில்லியனாக குறைக்கப்பட்டது.

ஆனால், இந்த 1.3 பில்லியன் யூரோ என்பது ஒரு நிலையான செலவு. ஒரு விமானம் வாங்கினாலும் சரி, 100 விமானம் வாங்கினாலும் சரி - 1.3 பில்லியன் யூரோவைக் கொடுத்தாக வேண்டும்.

ஆனால், 126 வாங்குவதற்குப் பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்கியதால், ஒரு விமானத்தின் விலை மிகவும் ஏறிவிட்டது.

2007ல் பேசப்பட்ட விலையைவிட இது 41 சதவீதம் அதிகம். 2011ல் பேசப்பட்ட விலையை விட 14 சதவீதம் அதிகம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலரும் கேள்வியெழுப்பியபோதும் #அரசு இது குறித்து #பேச_மறுத்துவிட்டது.
ராணுவத்திற்கு ஆயுதங்கள், பிற பொருட்களை வாங்குவதற்கென விரிவான விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு விற்பனை தொடர்பான பேரத்தைத் துவங்குவதற்கு முன்பாக, #நிபுணர் குழு அமைத்து நிறுவனங்களோடும் அரசுகளோடும் இவர்கள்தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். 
அப்படி தஸால் நிறுவனத்தோடு நடத்தும் போது அதற்கு இணையாக #அரசுத் தரப்பும் #பேச்சுவார்த்தை நடத்தியது என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் கோப்புகளில் குறிக்கப்பட்டிருக்கிறது.

கீழ் மட்டத்திலிருந்து துவங்கி, பாதுகாப்பு செயலர் வரை இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி இணையான பேச்சுவார்த்தை நடத்தினால் ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனம் இதனைப் பயன்படுத்திக்கொள்ளும்; அது இந்திய தரப்பின் வலிமையைகுறைத்து #இந்தியநலன்களுக்கு_எதிராகஇருக்குமென்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தக் கோப்பு அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் #மனோகர் பாரிக்கருக்குச் செல்கிறது. வழக்கமாக இம்மாதிரி கோப்புகளை அவர் உடனடியாக பார்த்து அனுப்பிவிடுவார்.

ஆனால், இந்த விவகாரத்தில் பல வாரங்களாக அதை என்ன செய்வதெனத் தெரியாமல் வைத்திருந்தார் போலிருக்கிறது.
பிறகு ஒரு குறிப்பை அதில் எழுதுகிறார் பாரிக்கர்: '"இது ஓவர் ரியாக்ஷன், பிரதமரின் முதன்மைச் செயலருடன் பேசி இதைத் தீர்த்துக்கொள்ளவும்'."

இந்த விவகாரத்தில் அவருக்கு அப்போது ஏதும் நிலைப்பாடு இல்லை என்று அந்தக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது.

2016 செப்டம்பரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்கள் முன்பாக, மேலும் சில விஷயங்கள் நடக்கின்றன.

அந்தத் தருணத்தில், தளவாடங்கள் வாங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய எட்டு விதிகள் விட்டுக்கொடுக்கப்படுகின்றன.
அவற்றில்
1) #ஊழலுக்கு எதிரான விதியும் விட்டுக் கொடுக்கப்படுகிறது. Penalty for undue influence என்பது நீக்கப்படுகிறது.
2)#கமிஷன் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்தால், தண்டனை என்ற பிரிவு நீக்கப்படுகிறது.
3)#இந்த நிறுவனங்கள், நிதி ரீதியாக ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள அவற்றின் கணக்கு வழக்குகளை இந்தியாவுக்கு அளிக்க வேண்டும் என்ற விதியும் விட்டுக்கொடுக்கப்படுகிறது.
இவையெல்லாம் பிரமதர் அலுவலக தலையீட்டில் கடைசி நேரத்தில் நடக்கிறது.
ஊழலுக்கு எதிரான விதிகள், வழக்கமாக கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எல்லாம் இப்படி கைவிடப்பட்டது #மர்மமாகத்தான் படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த #நிதி_நிபுணரான_சுதான்ஷு_மொஹந்தி எழுதிய குறிப்பையும் வெளியிட்டிருக்கிறோம்.
அதாவது #பாதுகாப்பு_அமைச்சர் திடீரென விதிகளை மாற்றி மொஹந்தியின் கருத்தைக் கேட்கிறார். அதை முழுமையாக படித்துப் பார்க்கக்கூட நேரம் அளிக்கப்படவில்லை.
இதனால் மொஹந்தி வேகவேகமாகப் பார்த்துவிட்டு, மூன்று குறிப்புகளை எழுதியிருக்கிறார். அதில் முக்கியமானது என்னவென்றால், #தஸால் நிதி நிலைமை குறித்து சந்தேகம் இருப்பதால், escrow account ஒன்றை உருவாக்கலாம்.
அதாவது
1)ஃபிரான்ஸ் அரசு ஒரு வங்கிக் கணக்கைத் துவக்க வேண்டும். 
2)இந்தியா தஸாலுக்குத் தர வேண்டிய பணத்தை அந்தக் கணக்கில் செலுத்தும்.3)தஸால், விமானங்களை ஒழுங்காக சப்ளை செய்தால், பணம் படிப்படியாக இந்திய ஒப்புதலுடன் தஸாலுக்குச் செல்லும்.
ஆனால், #மொஹந்தியின் #கோரிக்கை ஏற்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்,

#விலை அதிகம்,

#ஒப்பந்தத்தின் ஷரத்துகள் முழுமையாக மாறிவிட்டது, #ராணுவத்திற்குத் தேவையான 126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானம்தான் கிடைக்கிறது என பாதகமான அம்சங்களே இந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன.

ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக #ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான விதி இல்லாமல் செய்யப்பட்டிருப்பதுதான் கவலையளிக்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு #பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் ஃபிரான்சிற்குச் செல்கிறார். அரசுத் தரப்பில் நடத்திய பேச்சு வார்த்தைகளின் முடிவில் 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கிறார்.

இந்தப் பேச்சு வார்த்தைகளில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றதாகத் தெரியவில்லை.

இந்த அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தஸால் நிறுவனத்தின் #சிஇஓ எரிக் ட்ராப்பியர்  "உள்நாட்டில் தயாரிக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கும் #HAL நிறுவனத்துடன் #95_சதவீதபேச்சுவார்த்தைகள் முடிந்தது "என்றார்.(அதாவது #HAL தான் உள்நாட்டு உற்பத்தி செய்ய வேண்டும் என்று உறுதி ஆன பிறகு தீடிரென அனில் அம்பானி க்கு இந்த வாய்ப்பு போகிறது)

பிரதமரின் அறிவிப்பில் HAL கைவிடப்படுகிறது. Make in India முழக்கம் கைவிடப்பட்டது. இது நிச்சயமாக தேசிய நலன்களைப் #பாதிக்கும் ஒரு #ஒப்பந்தம்தான்.

இப்போது ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கும் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை தெரியவில்லை. ஆனால், #அனில் அம்பானி #நிதி_நெருக்கடியில் இருக்கிறார் என்பது தெளிவு.

#கேள்வி. பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எழுதிய குறிப்பை முதல் நாள் வெளியிட்ட நீங்கள், அதற்குக் கீழே அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய குறிப்பை வெளியிடாதது ஏன்?

#ப. அன்றைக்கு எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களில் அவ்வளவுதான் இருந்தது. அடுத்த நாள் அந்த ஆணவத்தை அவர்களே வெளியிட்டார்கள். நாங்கள் crop செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியேதும் நாங்கள் செய்யவில்லை. ஒரு விஷயத்தை புலனாய்வு செய்யும்போது முதலிலேயே எல்லா ஆவணங்களும் கிடைத்துவிடாது. படிப்படியாகத்தான் கிடைக்கும். படிப்படியாகத்தான் வெளியிடவும் முடியும்.

இந்த விவகாரத்தில் மனோகர் பரிக்கருக்குத் தெரியாமல் பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றாலும் பிறகு, விதிகள் மாற்றம் போன்றவை அவருக்குத் தெரிந்தேதான் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் எழுதிய கோப்பு அவருக்கு 2015 டிசம்பரில் அனுப்பப்படுகிறது.

வழக்கமாக விரைவில் முடிவெடுக்கும் அவர், மிகத் தாமதமாக 2016 ஜனவரி மாதம் பட்டுக்கொள்ளாமல் பதில் எழுதுகிறார். ஆனால், மாதங்கள் செல்லச்செல்ல ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவர் நேரடியாக இந்த ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார்.

#மனோகர் பாரிக்கர் இதில் தனக்கு #நேரடியாக தொடர்பில்லையென சொல்லலாம். ஆனால், வி.பி. சிங் போன்றவர்கள் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பார்கள்

#Sovereign guarantee அளிக்கப்படவில்லை. ஆனால் #Letter of comfort என்ற ஓர் ஆவணத்தை #ஃபிரான்ஸ் அளித்திருக்கிறது.

அதற்கு சட்ட ரீதியான எந்த அங்கீகாரமும் இல்லை. தஸால் நிறுவனம் வாக்குறுதி தவறினால், இந்த ஆவணம் எதற்கும் உதவாது.

#கேள்வி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, அரசு மாறினால் ஒப்பந்தம் ரத்துசெய்யப்படுமா?
#பதில் ரஃபேல் நல்ல விமானம்தான். ஆனால், #யுரோ_ஃபைட் என்று ஒரு நிறுவனமும் இதில் போட்டியில் இருந்தது
யுரோ ஃபைட். அவர்கள் #20_சதவீதம் #தள்ளுபடி அளிக்க முன்வந்தார்கள். அந்த விமானத்தின் விலை, ரஃபேலைவிட குறைவு என நிதி நிபுணர்கள் குறிப்பெழுதியிருக்கிறார்கள்.

ஆனால், அந்த விமானத்தை வாங்கவில்லை. இனி இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய முடியாது. ஆனால், விசாரணை நடத்த முடியும்

#கேள்வி : போஃபோர்ஸ் ஊழல் நீங்கள் தான் வெளியிட்டீர்கள் அது குறித்து கூறுங்கள்?
#பதில்: போஃபோர்ஸ் ஊழலை நாங்கள் வெளியிட்ட போது மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தது அந்த காலக்கட்டத்தில்.. இத்தனைக்கும் நானும் ராஜீவ் காந்தியும் நண்பர்கள்தான் .அவ்வப்போது தொலைபேசியில் உரையாடுவோம் இலங்கை பிரச்சினை பற்றி எல்லாம் என்னிடம் கேட்பார் .

போஃபோர்ஸ் பற்றி எதுவும் கேட்க மாட்டார் ஆனால் ஒரு சமயம் நேரில் சந்திக்கும் போது "அதில் ஊழல் நடந்தது என்றால் யார் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் ?"என்று கேட்டார் .நான் "மேலிடத்தின் சம்பந்தம் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை "என்றேன்.

என்னை புன்னகையுடன் பார்த்து "எனக்கோ என் குடும்பத்திற்கோ இதில் எந்த சம்பந்தமும் கிடையாது "என்றார் ஆனால் ஒன்று ராஜிவ் மிகவும் கண்ணியமிக்கவர் .அதை மறுக்க முடியாது.

#கே. இந்த விவகாரத்தில் இன்னும் என்ன அம்பலப்படுத்தப் போகிறீர்கள்?
#ப. இப்போது அதை சொல்ல முடியாது. ஆனால், ஆச்சரியங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. பல ஆவணங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக