வெது வெதுப்பான எண்ணெய் மசாஜ்
## ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு எண்ணையை (அ) மூன்றையும் சம விகிதத்தில் கலந்து, வெது வெதுப்பாக (மட்டும்) சுட வைத்து, தலைமுடி வேர் இருக்கும் தோல் பகுதியில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
## சுடு நீரில் முக்கி எடுத்த ஒரு துவாலையால்
தலையை கட்டி ஒரு மணி நேரம் ஊறிய பின்பு, சீயக்காய் அல்லது ஷாம்பூ தேய்த்து குளிக்க
வேண்டும்
இயற்கை சாறு மருத்துவம்
இயற்கை சாறு மருத்துவம்
## பூண்டு சாறு (அ) இஞ்சி சாறு (அ) சின்ன வெங்காய சாறு, இவற்றில் ஏதேனும் ஒன்றை முதல் நாள் இரவே தலையில் நன்றாக தேய்த்து ஊற வைத்து, மறு நாள் காலை தலைக்கு குளிக்க வேண்டும்.
## இதே போல வெது வெதுப்பான பச்சை தேநீரை ( Green Tea ) தலையில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊறிய பின்பு தலைக்கு குளித்தால், ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு முடி வேர்கள் நன்கு செயல் புரியும்
முடியை சுத்தமாக வைத்திருத்தல்
## நாள் தவறாமல் எண்ணெய் குளியல் எடுப்பது, சுத்தமான பழக்க வழக்கங்கள், சத்தான உணவு, போதிய அளவு தண்ணீர் மற்றும் பழச்சாறு அருந்துதல், தரமான எண்ணெய் மற்றும் ஷாம்பூ உபயோகித்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றை பின்பற்றினால், நம் தலை முடியும் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்கும்
முடிக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை தவிர்
## தலை முடியை இழுத்து பாழாக்குமாறு செய்யப்படும் சிகை அலங்காரங்கள், தலைக்கு ரசாயன சாயம் பூசுவது (Chemical Hair Dye), பேர்மிங் (Perming), ஸ்ட்ரைடெனிங் (Straightening) என்ற தேவையற்ற ரசாயன சிகிச்சைகள், சுட சுட எண்ணெய் மசாஜ், சூடான அயன் (Hot Ironing) போன்ற முறைகளால், முடி அப்போதைக்கு அழகாய் தோன்றினாலும், உண்மையில் வலுவிழந்து போய் நாளடைவில் உதிர்ந்து விடும் அபாயம் அதிகம்.
தியான பயிற்சி
## நம்பினால் நம்புங்கள், முடி உதிர்வதற்கு இரு முக்கிய காரணிகள், மன அழுத்தம் மற்றும் வேலை பளு ஆகும்.
## தியான பயிற்சி செய்வதால், இவை குறைந்து, ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சீராக்கி, முடியை பேணி காக்க உதவும்
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக