தேவையானவை:
புடலங்காய்
– 2
வெங்காயம்
– 1
மஞ்சள்
தூள் – 1 தேக்கரண்டி
பட்டை,
கறிவேப்பிலை – தாளிக்க
எண்ணைய்,
உப்பு – தேவையான அளவு
அரைக்க:
காய்ந்த
மிளகாய் -4
வேர்க்கடலை
– சிறிய கப்
சோம்பு
– 1 தேக்கரண்டி
செய்முறை:
அரைக்க
கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும்.
புடலங்காய்,
வெங்காயத்தை வட்ட வடிவில் வெட்டவும்.
ஒரு
கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில்
வெட்டிவைத்திருக்கும் வெங்காயத்தைப் போட்டு, லேசான நிறம் மாறும்வரை வதக்கி,
வெட்டிய புடலங்காய் சேர்க்கவும். அதை வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து,
லேசாக தண்ணீர் தெளித்து வேக விடவும். காய் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும்
விழுதைப் போட்டு இறக்கவும். மணமான, சுவையான புடலை வேர்க்கடலை கறி தயார்!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக