இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..இப்பொழுதே இணைந்துகொள்
அஸ்வினியில் பிறந்தவர்:
அழகானவர், அலங்காரப் பிரியர். எல்லாருக்கும் பிரியமானவராக விளங்குபவர். திறமையானவர், புத்தி மிகுந்தவர், கடைக்கண் சிவந்தவர். மார்பு அகன்றிருப்பவர். சாந்தமான போக்கும் கொண்டவர்.
பரணியில் பிறந்தவர்:
உறுதியான மனப்போக்கும் படைத்தவர். பொய்யைப் புனைந்து சொல்லத் தெரியாதவர். சமத்தானவர், அதிகமான நோய்களுக்கு உட்படாதவர், ஞானம் பெற்றவர். செல்வங்களை அடைபவர். சுகங்களை விரும்புகிறவர். பின் பக்கம் மரு இருக்கப் பெற்றவர்.
கார்த்திகையில் பிறந்தவர்:
அதிகமாகச் சாப்பிடுகின்றவர். பசி தாங்காதவர். நல்ல நண்பர்கள் உள்ளவர், புகழ் பெற்றவர், வலுவான உடல் பெற்றவர். பொய்யும் பொருந்தச் சொல்பவர், ஆழமான மனம் கொண்டவர்.
ரோகிணியில் பிறந்தவர்:
சத்தியம் தவறாமல் நடப்பவர். ஆசார ஒழுக்கங்களில் பற்றுள்ளவர், பிறர் பொருளை விரும்பாதவர். இனிதான வாக்கை உடையவர், புத்தியுள்ளவர். அழகான சரீர வாகு பெற்றவர், எவருக்கும் உணவளிக்கும் இரக்க மனம் பெற்றவர், கண் பருத்திருப்பவர். பால் பானங்கள் அடிக்கடி அருந்தும் பழக்கத்தினர்.
மிருகசீரிடத்தில் பிறந்தவர்:
சமர்த்தானவர். சதா சுற்றுவதில் விரும்பமுடையவர். வாக்கு சாதுரியமானவர், அச்சம் கொண்ட நெஞ்சினர், உற்சாகமாக எப்போதும் இருப்பவர், செல்வ நலம் அடைபவர், போக விருப்பலே மிகுதியானவர், வித்துவாம்சம் பெற்றவர், நினைத்ததை சாதிக்க எவ்வழிகளையும் நாடுகிறவர்.
திருவாதிரையில் பிறந்தவர்:
மனம் வேறாகவும், சொல்வது வேறாகவும் மறைக்கத் தெரிந்தவர். தன் காரியத்திலேயே சதா கண்ணாயிருப்பவர். சுயகர்வம் மிக்கவர். நன்றிக்கே பொருள் தெரியாதவர். கெட்டவர் சகவாசப் பிரியர், பிறரை வருத்தி ஆனந்திப்பவர், பாவங்களைச் செய்வர், அடிக்கடி காரணமில்லாமலே கோபம் கொண்டு பிறர் வெறுப்பைச் சம்பாதிப்பவர்.
புனர்பூசத்தில் பிறந்தவர்:
தவயோகம் நாடுபவர், சுகங்களை விருப்புபவர், நல்ல ஒழுக்கமாக நடப்பவர், மந்தமான புத்தியுள்ளவர், வினயம் மிக்கவர், நோயான சரீரம் உள்ளவர். அதிக தாகம் உடையவர். அற்ப சந்தோஜம் அடைபவர். சாதுரியமான மனம் உடையவர். கடினமான வாக்கு உடையவர். வஞ்சகமானவர், புத்திசாலித்தனம் மிகுந்தவர்.
பூசத்தில் பிறந்தவர்:
சாந்தமான மனப்போக்கினர். எல்லோராலும் விரும்பப்படுகின்றவர். சாஸ்திரப் பொருள் அறிந்தவர். செல்வம் உள்ளவர். தர்மம் செய்யும் இயல்பினர், வழக்கு நியாயம் பேசுவதில் வல்லவர். பெற்றோரை அன்போடு ஆதரிப்பவர், குணசாலி என்று புகழ் படுகிறவர்.
ஆயிலயத்தில் பிறந்தவர்:
வஞ்சகமான மனமுள்ளவர். எல்லாவற்றையும் அடைய நினைபவர், பாவச் செயல்களைச் செய்வதில் ஈடுபடக் கூடியவர். புத்திமானாகவும் பலவானாகவும் இருப்பவர், சுகத்தில் ஆர்வம் மிக்கவர்.
மகத்தில் பிறந்தவர்:
பெரிய தன வந்தராவார். பணியாட்கள் பலரை வைத்து வேலை வாங்குவார், போகங்களை விரும்பி அனுபவிப்பார். தெய்வபக்தி, பிதுர்பக்தி மிகுந்தவர். சஞ்சாரப் பிரியர், மகா உற்சாகமாக இருப்பவர். அழகான தோற்றம் உள்ளவர், விவேகமானவர், சுகந்த பரிமளங்களிலே பிரியமுடையவர், வலப்புறம் மரு உள்ளவர்.
பூரத்தில் பிறந்தவர்:
பிரியமாக பேசுகிறவர். தான குணம் மிக்கவர். சாந்தியுள்ளவர், அரச சேவகம் செய்வர், பணம் தேடுவதில் ஊக்கமானவர், எதிர்காலத்தை சரியாக அறிந்து நடப்பவர், வியாபாரங்களில் ஈடுபடுகிறவர், கடினமான வாக்கும், சஞ்சலமான சித்தமும் கொண்டவர். விலங்குகளுக்கு பிரியமானவர்.
உத்திரத்தில் பிறந்தவர்:
அனைவராலும் பிரியங்காட்டப் பெறுகின்றவர். வித்தையால் செல்வம் தேடிக் கொள்பவர். போகவானாக இருப்பவர். மனோ வியாதி இல்லாதவர், முன்கோபம் கொண்டவர், பொய் பேசாதவர், ஸ்ரானப் பிரியர், குறைந்த பசியுள்ளவர், ஞானமான மனமுள்ளவர்.
அஸ்தத்தில் பிறந்தவர்:
உற்சாகமாக இருப்பவர், தைரியமான மணத்தினர், புத்தியுள்ளவர், பான பிரியர், இரக்கமில்லாதவர், சேர புத்தியுள்ளவர், சூரத்தனம் மிக்கவர், அழகான உடலுள்ளவர், பின்காலத்தில் பெரும் செல்வம் பெறுகிறவர். ஸ்ரானப் பிரியர், குருபக்தி உடையவர்.
சித்திரையில் பிறந்தவர்:
பலவிதமான ஆடை ஆபரணங்களை அணிய விரும்புகிறவர், சுகமான கண் பார்வை கொண்டவர், நல்ல குணம் உள்ளவர், சஞ்சாரப் பிரியர், தாமதமான புத்தியினர், உறுதியான பேச்சியுடையவர், சிக்கனமானவர், வல்லமையும் பரிவும் உள்ளவர், மிகுந்த
பாசமானவர், நம்பிக்கைக்கு உரியவர்.
சுவாதியில் பிறந்தவர்:
அறிவுக் கூர்மை பெற்றவர், நல்லயோகம் உள்ளவர், வியாபாரத்தில் விருப்பமுடையவர், தயாளமானவர், பிரியமான பேச்சு பேசுகின்றவர். தாமதபுத்தி படைத்தவர், அரசாங்க பணி செல்வோர், வித்துவாசம் பெற்றவர், தாய் தந்தைக்கு எப்போதும் இனிமையானவர்.
விசாகத்தில் பிறந்தவர்:
பொறாமை கொள்பவர், சாந்தியுள்ளவர், உரையாடலிலே சமர்த்தானவர், கலகப் பிரியர், முன்கோபம் கொண்டவர், சொல் தெளிவற்றவர், சேவை செய்யும் பண்புள்ளவர், கவலைப்படாமல் மனதை வைத்திருப்பவர், தெய்வ பக்தி உள்ளவர், படை வீரரை போல் நடந்து செல்பவர்.
அனுஷத்தில் பிறந்தவர்:
நல்ல ஞானியாக விளங்குபவர், பிறதேசங்களில் வாசம் செய்பவர், பசி பொறுக்காதவர், பெரியோரை போற்றகிறவர், தாம்பூலம் பிரியர், செல்வம் உள்ளவர், கடைக்கண் சிவந்தவர். பெண்களால் விரும்பப்படுகிறவர். மயிரழகு பெற்றவர். பெற்றோரை ஆதரிப்பவர், யானை புத்தி பெற்றவர்.
கேட்டையில் பிறந்தவர்:
சதா சந்தோஷமாக விளங்குகின்றவர். தர்மவானாக விளங்குகின்றவர், அதிகமான கோபமுள்ளவர், பொய் பேசுகிறவர், உபாயம் மிகுந்தவர், ஸ்ராணப் பிரியர், சிற்றுண்டி பிரியர், பிரபுக்கள் நட்பு உடையோர், நெருங்கிய ரோம ஒழுங்கு பெற்றவர், பொய்யையும் அடித்துப் பேசி மெய்யாகப் பிறரை நம்பவைக்கும் சக்தி பெற்றவர். கடினமான வாக்கு உள்ளவர்.
மூலத்தில் பிறந்தவர்:
கர்வமானவர், கனம் பெற்றவர், சுகமான வாழ்வை விரும்புகிறவர், வசீகரமானவர். ஸ்திரமான புத்தியுள்ளவர், போகப் பிரியர், நித்திரைப் பிரியர், காரியம் செய்யும் சமர்த்துவர், சிறந்த தவயோகம் பெற்றவர், சிக்கனமானவர். கல்விமான், உறவினர்களோடு நெருங்காதவர், முன்கோபக்காரர், கொடுமையான மனத்தையும் பெற்றவர்.
பூராடத்தில் பிறந்தவர்:
விருப்பம்போல் அமைந்த வாழ்க்கைத் துணையைப் பெற்றவர். மானஸ்தன், கர்வமுள்ளவர், பல நண்பர்களை உடையவர், உயர்ந்த உடல்வாகினர், வீசாரமுள்ளவர், பிரபுக்கள் சிநேகம் பெற்றவர். வருவதை யோசித்து நடப்பவர், தாயாருக்கு இனியவர், தன்னைச் சேர்ந்தவரை ஆதரிப்பவர். தந்திரமான தோற்றத்தினர், பொய் பேசாதவர், சஞ்சாரப் பிரியர், பெண்களுக்கு இனியவர், செல்வம் உள்ளவர்.
உத்திராடத்தில் பிறந்தவர்:
புத்திக் கூர்மை படைத்தவர். தார்மீக சிந்தையும் செயலும் கொண்டவர், ஏராளமான நண்பர்களைப் பெற்றவர். நல்லொழுக்கம் உள்ளவர், சகலருக்கும் வேண்டியவர், தாய் தந்தையருக்கு விருப்பமுள்ளவர், வலுவான தேகம் பெற்றவர், பலமானவர், புத்தி மிகுந்தவர், நல்ல சொற்களை பேசுபவர், போசனப் பிரியர், நீர்ருக்கு அஞ்சாதவர், பக்திமான், பகையை வஞ்சம் தீர்க்கும் உறுதியுள்ளவர், பிறர் பொருளை விரும்பாதவர், உத்தமர்க்கு இனிதானவர், கம்பீரமாகப் பேசுகிறவர், தியாக மனம் பெற்றவர்.
திருவோனத்தில் பிறந்தவர்:
சீமானாக விளங்குபவர். வித்துவாசம் மிக்கவர். கம்பீரமான தோற்றமும், கீர்த்தியும் பெற்றவர். தன்மனம் நினைத்தபடியே பேசுகின்ற பிடிவாதமுள்ளவர். முன் பின் பார்த்து நடப்பவர், பெண்களால் நேசிக்கப்படுகிறவர், வாசனைப் பொருளை நேசிப்பவர், உற்சாகமானவர், கனவானாக விளங்குபவர்.
அவிட்டத்தில் பிறந்தவர்:
சூரத்தனமானவர், தானம் செய்ய விரும்புகிறவர், திறமையானவர், கருமித்தனமானவர், தான் சொல்வதே சரியெனச் சாதிப்பவர், அச்சமற்றவர், பிறர் பேச்சைக் கேளாதவர், போசனப் பிரியர், பெண்களுக்கு வேண்டியவர், பெரியோர்க்கும் வேண்டியவர், அடங்கிப்போய் பிறர் பொருளை அபகரிப்பதில் மிக வல்லவர்.
சதயத்தில் பிறந்தவர்:
நீட்டூரமாக பேசுகிறவர், சத்தியவாதியாக இருப்பவர், சதா கவலைப்படுபவர், விரோதிகளை வெல்பவர், சாகசமாகப் பேசி பழகுகிறவர், புத்திசாலி, கைகளால் வலுத்தவர், ஆட்சியாளருக்கு இனியவர், வித்துவாசம் கொண்டவர், சூரர், பெண்கட்கு அன்பர், வழக்குப் பேசுவதில் வல்லவர், நீராடலில் பிரியமுள்ளவர்.
பூரட்டாத்தில் பிறந்தவர்:
சோகமான மனத்தைப் பெற்றவர், பெண்களால் வெற்றி கொள்ளப் பெற்று அவர்கட்கு இளசய நடப்பவர். தன சம்பித்து உடையவர், பெண்கள் வழியிலும் தன வருமானம் பெறுகிறவர், வாய்சாலம் மிகுந்தவர், தெய்வபக்தி குறைந்தவர், கல்விமானாகத் திகழ்பவர், ஆசை மிகுந்தவர், பொறாமையும் கொள்பவர்.
உத்திரட்டாத்தில் பிறந்தவர்:
வாய்ச்சாலத்தில் மிகுந்தவர். சுகியாக விளங்குபவர், புத்திர பெளத்திரங்களை அதிகமாக பெற்றவர், விரோதிகளை வெற்றி கொள்பவர், தர்மசீலர், நீராடலில் பிரியர், புத்திசாலி, பெண்கட்கு இனியவர், சாதுரியம் மிகுந்தவர், பொய் பேசுகிறவர், மற்றவர்களுக்காக பணி செய்வோர், நல்லவர்களால் விரும்பப்படுகிறவர், வழக்கிலே எப்போதும் பலவானாக நிற்பவர்.
ரேவதியில் பிறந்தவர்:
சர்வஜனப் பிரியராக இருப்பவர், பரிபூரணமான எழில் பெற்றவர், சூரத்தனம் மிகுந்தவர், பிறர் பொருளை விரும்பாதவர், பெண்கட்கு விருப்பமானவர், பிறர் சொல் கேட்பார், குணமுள்ளவர், சாதுரியமான பேச்சினை உடையவர், சிநேகம் மிகுந்தவர், “இல்லை” என்று வெளிப்படையாக மறுக்க கூடியவர், பழிக்கு இடம் தராமல் நடப்பவர், நிலையில்லாத செல்வத்தைக் கொண்டவர்....

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக