Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

குமரி மாவட்டத்தில் நம்பூதிரி, நாயர், நாஞ்சில் நாட்டுப் பிள்ளைகள், கிருஷ்ணன் வகையினர் பல்வேறு சமுதாயங்கள் பற்றிய தகவல் (சேரர் வரலாறும் மக்கள் வாழ்வியலும் )



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


வேதகாலத்துக்கு முன்பிருந்தே தென்னகத்தை மூவேந்தர்கள் சிறப்புடனே ஆண்டுவந்தனர் என்ற வரலாற்று உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இம்மூவேந்தர்களில் முதல் வேந்தன் சேரவேந்தன் ஆவான். பரப்பளவிலும் சேர நாடு எண்பது காதங்களைக் கொண்டு பாண்டிய நாட்டைவிட ஒன்றரை மடங்கு பொரியதும், சோழநாட்டைவிட மூன்றரை மடங்குமாக அமைந்திருந்தது. 

இமயத்தை வரம்பாகக் கொண்ட இமயவரம்பன் சேரலாதனையும், பாரதப்போரில் இரு சாரர்படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்த பெருஞ்சோற்று உதியனையும், ஆரிய மன்னர்களைக் கொண்டு கல் சுமந்து வரச்செய்து கற்புக்கரசி கண்ணகிக்கு சிலைவடித்து சிறப்பித்த சேரன் செங்குட்டுவனையும், தமிழ்த்தாய்க்கு சிலப்பதிகாரத்தை தந்து சிறப்புறச் செய்த இளங்கோ அடிகள் போன்றோர்களைத்தந்து பண்புடனே இம்மண்ணில்  கோலோச்சியவர்கள் சேரர்களே. 

எனினும் இவர்களது வரலாறுகளை முறையாகவும், விரிவாகவும் இதுகாறும் எழுதப்படவில்லை என்ற ஒரு குறை உண்டு. மக்கள் வாழ்வியலாக சேரநாட்டு சான்றோர் குலத்தைக் குறித்தும், அவர்கள் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களைக் குறித்தும், ஆரிய தாக்கத்திற்குப் பிறகு சேரநாட்டில் உருவான சில முக்கிய புதிய சமுதாயங்களைக் குறித்தும், அவர்களது பண்பாடுகளைக் குறித்தும் இயன்ற அளவு விரிவாக எழுதியுள்ளேன்.

               சேரர் வரலாறும் மக்கள் வாழ்வியலும் என்ற இந்நூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னிடத்தில் எழுந்ததேயில்லை. ஒரு தருணத்தில் “அஜந்தாவின் ஆன்மீக வினா – விடை” என்ற புத்தகத்தில் 1309-வது வினாவாக “நாயன்மார்களில் ‘சாணார்’ எத்தனைபேர்” என்று தொகுப்பு ஆசிரியர் (கிருஷ்ணன் வகையினன்) ஒரு வினா எழுப்பியிருந்தார். 

சான்றோர் சமுதாயமாகிய நாடார் இனத்தவரைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்குடனே எழுப்பப்பட்ட மேற்படி ‘வினா’ என் மனதில் ஒரு உறுத்தலை உருவாக்கிவிட்டது. இவரைப்போன்று பிற  சமுதாயங்களைச் சார்ந்த பலரும் நாடார் சமுதாயத்தை கொச்சைப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக நின்று செயல்பட்டனர், 

செயல்பட்டும் வருகின்றனர். நாடார் மக்களுக்கு மட்டுமல்ல, ஏனைய அவர்ண இந்து மக்களுக்கும் கோவில் நுழைவு அன்று தடைசெய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து 1854-ல் வெள்ளையன் நாடாரும் மற்றும்

அவருடன் சுமார் பன்னிரண்டாயிரம் நாடார் பக்தர்களும் “அக்கினிக்காவடி”யேந்திகுமாரகோயில்  உள்பிரவேசத்தை வலுக்கட்டாயமாகச் செய்தனர். இந்த நிகழ்ச்சியைக் குறித்து உயர்சாதியான் என்று முத்திரை குத்தப்பட்ட நாயர் சமுதாயத்தைச் சார்ந்த நெல்வேலி நீலகண்டப்பிள்ளை என்பார் 

நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி “அக்கானிக் காவடி” என்றொரு கவிதையை மலையாள மொழியில் எழுதி வெளியிட்டார். “அக்கினிக் காவடியை” “அக்கானிக் காவடி” என்ற கூற்றும் நாடார் சமுதாயத்தை சிறுமைப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது நோக்குதற்குரியது. இவரைப்போன்று 1891-ல் சி. வி. ராமன்பிள்ளை (நாயர்) மார்த்தாண்ட வர்மா என்ற வரலாற்றுக் கதையை எழுதினார். 

அந்நூலிலும் நாடார்களை சாணார் என்றும், பிராந்தன் (கிறுக்கன்) என்றும் குறிப்பிடுகின்றார். இந்நூலை B. K. Menon என்பவர் 1936-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மறுபதிப்பை 1998-ல் புதுதில்லியில் சாகித்திய அக்கடமியினர் வெளியிட்டுள்ளனர். இதிலும் நாடார்களை இழிவு வார்த்தைகளால் பழிக்கத் தவறவில்லை. “stupid face” ‘idiot’ – ‘mad channan’ – ‘low born chanars’ ‘strange looking channars’  போன்ற இழிவு வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார். இருவரும் நாயர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதால் நாடார்களை இழிவுபடுத்தியுள்ளனர். அதைப் போன்று குமரித் தந்தை மார்ஷல்நேசமணியை ‘பொய்யர்’ என்று வெள்ளாள பிரமுகரான் பி. சுப்பிரமணி தனது நூல் நாடர் சமூகத்தாரை கொச்சைப்படுத்தும் நோக்குடனே எழுதியுள்ளார்.

                          திரு. பி. கே. கோபாலகிருஷ்ணன், தனது நூலான Keralathinte Samskarika Charithram (A Cultural History of Kerala – 1974 (Malayalam) நாடார் சமுதாயத்தை “சான்றோர்” என்று எழுதுகிறார். பக்கம் – 293 – ஆறாவது பதிப்பு – 2000) மற்றவர்களைப் போன்றல்லாமல், சான்றோர் சமுதாயத்தை கொச்சைப்படுத்தாதது வரவேற்கத்தது. ஆயினும் நம்பூதிரி, நாயர், ஈழவர், நாஞ்சில் நாட்டுப் பிள்ளைகள், கிருஷ்ணன் வகையினர் போன்றோரின் இயல்பான பண்பாடுகளை முற்றிலும்மறைத்துவிட்டு அவர்களுக்கு உயர்வான பண்பாடுகள் உண்டு என்று  தோன்றும்படியாக குறிப்பிட்டிருப்பது வரலாற்று இருட்டடிப்பே.

                         எனவே, மேட்டுக்குடியினரின் இத்தகைய மனப்போக்குகள் என்னில் ஒரு நெடும் நெருடலை உருவாக்கியதில் வியப்பொன்றுமில்லை. மற்றவர்களைப் போன்று எனக்கும் சமுதாயப்பற்று இருக்கத்தானே செய்யும். இருப்பினும், இத்தகையவர்களின் ஏளனப் பேச்சுகளுக்கும், எழுத்துக்களுக்கும் ஏதேனும் வரலாற்று உண்மைகள் இருக்கின்றனவா? என்று ஆய்வதில் எனது முயற்சி திரும்பியது. இதைக் கண்டறிய சுமார் 100 வரலாற்று நூல்களை நான் படிக்க வேண்டியதாயிற்று. 

இவ்வரிசையில் முதல் தெம்பை எனக்கு அளித்த
நூலான வி. நாகம் அய்யா எழுதிய “The Travancore State Manual Vol. – 2(பக்கம் 392)-ல்“இச்சமுதாயத்தின் சாரியான பெயர் “சான்றோர்” என்பதேயாகும் . . . தொல் பழங்காலத்தில் இவர்கள் இந்நாட்டின் பல பாகங்களை ஆளுகின்றவர்களாக குடிஅமர்ந்தனர் என்றும் தெரிகிறது. நாடார் அல்லது நாடாள்வார் என்ற சொற்றொடர்களால் மட்டுமல்லாமல், இவர்களின் தனிச்சிறப்புடைய பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகளினாலும் ஒரு காலத்தில் இவர்கள் ஆளும் இனமாக இருந்தனர் என்பதை அறுதியிட்டுக் கூறலாம்” என்று அவர் எழுதுவதிலிருந்து,

சேரநாட்டில் நாடார் இன மக்களின் தன்மையும், தொன்மையும் எது என அறியமுடிந்தது. தவிரவும், கேரளநாட்டு வரலாற்று ஆய்வாளரான இளம்குளம் குஞ்சன்பிள்ளை (நாயர் சமூகத்தவர்) அவர்களும் “சேரமன்னர்கள்
செறுமராயிருக்கலாம்” என்பது கே. பி. பத்மனாப மேனன் கருத்து. பி. தி. சீனிவாசய்யங்கார் அவர்களை குறவர் என்கிறார். அவர்கள் வில்லவர்களாக (நாடார்கள்) இருக்கலாம் என்று நான் கூறியிருக்கின்றேன். 

காசர்கோட்டுப்
பகுதிகளில் பதனீர் இறக்கும் தொழில் செய்யும் நாடார் சாதியினரை வில்லவர் என்று இப்போதும் அழைக்கின்றனர். சேரமன்னர்களின் க்ஷுரகர்கள் காவிதிகளாயிருந்ததும், வில்லோன், சான்றோன் முதலிய வழக்குகளும், சின்னம் பனம் பூவாயிருந்ததும் என் கருத்துக்காதாரங்கள்” என தனது நூலான “பண்டைய
கேரளம்” பக்கம் 198-ல் கூறியிருக்கிறார். 

இவைகளினாலும் சேரமன்னர்களும், அன்னாட்டு மக்களும் சான்றோர் மரபில் வந்த நாடார்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது. ஆரிய சனாதன முறையில் நாடாண்டவர்களை சத்திரியர்கள் என்றனர். ஆனால் தமிழர் மரபுப்படி மன்னர்களையும் அவர்கள் வழி வந்தோரையும் சான்றோர் என்றனர். ஆகையால் சேரமன்னர்கள் சான்றோர் குலத்தவர்கள் என்பதால் அம்மன்னர்களைக் குறித்து விரிவாக ‘பாகம் ஒன்றில்’ கூறப்பட்டுள்ளது.   இரண்டாம் பாகத்தில் வேணாட்டு மன்னர்களைக் குறித்தும், மூன்றாம் பாகத்தில் சான்றோர் குலத்தைக் குறித்தும், நான்காம் பாகத்தில் புதிய சமுதாயங்களைக்குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளன.

                           இதே வரலாற்று ஆசிரியர் குஞ்சன்பிள்ளை மேற்படி நூலில் 50-வது பக்கத்தில், நம்பூதிரிப் பிராமணர்களின் இயல்பான பண்பாடுகள் எது என்பதைக் கூறுகிறார்.

“வட இந்தியாவில் அந்தணர்கள் சாதாரணமாக இன்றும் ஊண் உண்கின்றனர். தென்னிந்தியாவிலும் ஏழாம் நூற்றாண்டு வரை அந்தணர்கள், சாதாரணமாக இறச்சி சாப்பிட்டு வந்தனர். கபிலர் ஐந்தாம்  நூற்றாண்டிலிருந்தவர். ‘இறச்சித் துவையலும், ஊண் சோறும் தின்று வருந்திய தொழிலன்றி வேறு தொழில்
செய்து பழக்கமில்லாததால் கைகள் மிகவும் மென்மையாக இருக்கின்றன’ என்று புறம் 14-ல் கூறுகின்றார்.

“ஊண்றுவை கறி சோறுண்டு வருந்து தொழிலல்லது
பிறிது தொழிலறியவாகலில் நன்றும் மெல்லிய . . .”, என்பதே அப்பாடல். கபிலர் ஒரு அந்தணர்.

தவிரவும், நம்பூதிரிப் பிராமணர்கள் திருவிதாங்கூர் கடலோர மீனவர்கள் என்ற கீழ்ச்சாதி மக்களினின்று உற்பத்தியானவர்கள் என்று W.W. Hunter கூறுகிறார். (Dr. W.W. Hunter-Orissa-Vol.I-Page : 254).  மலையாள பிராமணர்களான  நம்பூதிரிகளில் ஒரு பிரிவினர் திருமணத்தில் ஒரு முக்கிய சடங்காக “மாப்பிள்ளை
மீன் பிடிப்பதில் வல்லவன்” என்று பறைசாற்றுவதாகும் என தலித் பந்து என். கே. ஜோஸ் ‘குட்ட நாட்டின் இதிகாசம்’ என்ற மலையாள நூலில் கூறுகிறார். (பக்கம் 148). இவைகளினால் கேரளத்து நம்பூதிரிப்  பிராமணர்களின் பண்பாடுகள் மற்றும் குலப்பெருமைகள் எவையென அறிகிறோம்.
                        “உண்மையைக் கூறுவதாயின் நாயர்களுக்கு பரம்பரை சிறப்புகள் ஒன்றும் இல்லை, நியதியற்ற திருமண உறவும், மிருகப்புணர்ச்சி கோட்பாடு மற்றும் பல கணவர்களோடு வாழ்கின்ற பண்பாடுகளுடனே வாழ்ந்ததைத் தவிர அவர்களுக்கு  வேறு சிறப்புகள் எதுவும் இல்லை” என காணிப்பையூர் சங்கரன் நம்பூதிரிப்பாடு
என்ற சமுதாய வரலாற்று ஆசிரியர் ‘நாயர்களின் பூர்வ கால வரலாறு’ என்ற நூலில் கூறுகிறார். ((Vol-II – Page iii)
அவர் மேலும் கூறுகையில் 
                      “ஒரு பெண்மணி பத்து ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது என்பதை உயர் பண்பாடு எனக் கருதுவதாலும், தனது சொந்த தாய் மற்றும் சகோதகளை அத்தகைய அநாகரீகத்திற்கு எவ்வித சங்கோஜமுமின்றி விட்டுக் கொடுக்கின்ற நீங்கள் (நாயர்கள்) அனைவரும் சாரியான தந்தைக்கு பிறக்காத குழந்தைகளாகவும், மேய்ச்சல் வயல்களில் மேய்ந்துத் திரிகின்ற மிருகங்களைவிட வெட்கமில்லாதவர்களும் ஆவர் என டிப்புசுல்தான் ஒரு விளம்பரம் வாயிலாக சுட்டியுள்ளாராம்.” (பக்கம் – 72) எனக் கூறுவதிலிருந்து நாயர்களின் பண்பாடுகள் என்ன என்பதையும் யாம் அறிந்து கொண்டோம். ஆனால் இவர்களுடைய இன்றைய நிலையைக் காணும் வேளையில் அவர்கள் ஏதோ தேவலோகத்து நாயன்கள் என்ற மட்டில் அலட்டிக் கொள்ளுகின்றனர். நேற்றைய உண்மையென்றாலும், அவர்களது வரலாறுகளுக்கு நாலோ அல்லது ஐந்தோ நூ ற்றறாண்டுகள் பாரம்பரியமே உண்டு என்பது மட்டும் உண்மை. இதையும் காணிப்பையூர் சங்கரன் நம்பூதிரி வெளிச்சமிட்டுள்ளார்.

                      கல்குளம் மங்கலம் என்ற ஊர் தொட்டு அகஸ்தீஸ்வரம் மணக்குடி காயல்வரையிலான நெல்கொழிக்கும் நீர் வள நாட்டை “நாஞ்சில் நாடு”  என்கின்றனர். இந்நாட்டை நாஞ்சில் வள்ளுவனும் அவன் வழியினரும் ஆண்டு  அனுபவித்து வந்தனர் என்பது வரலாற்று உண்மை. வடுகர்களான நாயக்க மன்னர்களின் வஞ்சனையால் மதுரையில் பாண்டியப் பேரரசு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 

விசுவநாத நாயக்கனின் அமைச்சனான அரியநாத முதலியாரின்  முயற்சியால் இந்த நாஞ்சில் நாட்டிலும் முதலியார்களை  குடியமர்த்தினார். இவர்கள் 12 பிடாகைகளில் குடியமர்ந்தனர். இவ்வாறு குடியமர்ந்தவர்கள் பிந்திய காலத்தில்
“வெள்ளாளர்” என்ற உழுதுண்போரின் குலப்பெயரை பிடுங்கியெடுத்து,  “நாஞ்சில் வெள்ளாளர்கள்” என்ற சிறப்புப் பெயரை எடுத்துக்கொண்டனர். இதனால் முதலியார்கள் வெள்ளாளர்கள் ஆயினர். இவர்கள் குடியிருக்கின்ற
இடத்தை “பிடாகை” என்றும் வகுத்துக்கொண்டனர். 

இந்த பிடாகை என்ற சொல் துளுவ நாட்டு மொழியில் உள்ள ‘படாகை’ என்ற சொல்லின் மருஊ ஆகும். ‘படாகை’ என்ற சொல்லுக்கு தமிழில் ‘பொரிய’ என்று பொருள்படும். எனவே இந்த சொல்லால், இன்றைய நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் பூர்வீகம் எந்த ஊர் என்பதை வெளிச்சமிடுகிறது. இவர்கள் துளுவ நாட்டில் உருதுமொழி பேசப்படுகின்ற நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற  உண்மையையும் இதன்பால் காண முடிந்தது. இந்த விளக்கத்தை ‘தமிழறிஞர்கள் பார்வையில் கவிமணி’ என்ற தொகுப்பு நூலில் ‘கவிமணியின் மருமக்கள் வழி மான்மியம், ஒரு கருத்தாய்வு’ என்ற கட்டுரையில், பக்கம் 134-ல் எடுத்தாளப்பட்டுள்ளது. எனவே நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் பூர்வீகம் துளுவ மொழி பேசுகின்ற துளுவ நாடு என்பதையே இது சுட்டி நிற்கிறது.

                         கிருஷ்ணன் வகையினர் துவாரகையில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்கள் என்ற புராணம் ஒரு புழுகுக் கதை என்று வரலாற்று ஆசிரியர் மாஸ்டேர்லிமைந்தன், ‘யார் இந்த கிருஷ்ணன் வகையினர்’ என்ற நூலில்
நிறுவியுள்ளார். தவிரவும் இவர்கள் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தில், எஞ்சிய மறவர் படையாளிகளுக்கும் உள்ளூர் நாயர் பெண்களுக்கும் உருவான ஒரு சங்கரச்சாதி என்றும் அவர் எழுதுகிறார்.  

ஆகையால் இவர்களின் பூர்வீகம் யாது, அவர்களது பண்பாடுகள் அனைத்தும் மறவர் வழிக் குருதி குணங்களே என்பதையும் அறிந்து கொண்டேன். இவர்களின் குணநலன்களை நன்கு அறிந்து வைத்துள்ள கல்குள வட்ட மக்கள் இவர்களைக் குறித்து ‘முதுமொழியாக’ இவ்வாறு கூறியுள்ளனர் 

“இணங்கினால் நக்கிக் கொல்வான் (நாயர்)
பிணங்கினால் ஞெக்கிக் கொல்வான் (குறுப்பு)
(குமரி மாவட்டப் பழமொழிகள் – எம். செபஸ்டீனாள்)
(ஞெக்குதல் என்றால் நொரித்தல் என்று பொருள்)
விளக்குத்தலை நாயர்கள் என்பார் மேலே குறிப்பிட்ட புதிய  சமுதாயங்களைவிட பழமையானவர்களும், சேர, சோழ நூற்றாண்டுப் போரில் ஈடுபட்டிருந்த சோழப் படையின் எச்சங்களாகும் என்று நான் நிறுவியுள்ளேன். இத்தகைய இழிவு பண்பாடுகளையும், பாரம்பாரியமில்லாத பல  சமுதாயங்கள் சேர நாட்டின் முதன்மை குடியினரை இழிவுபடுத்தியிருப்பது இரண்டு காதற்றவள் மற்றவர்களை “மூளி” என்று சிறுமைப்படுத்துவது
போன்றதாகும்.

              எனவே, பிராமண நம்பூதிரிகள் தொட்டு, விளக்குத் தலைகள் வரையிலான அனைத்து சமூகங்களும் சேர நாட்டில் பிந்திய காலங்களில் குடியேறிய இனத்தவர்கள் எனவும், இவர்கள் கி. பி. பத்தாவது நூற்றாண்டுக்குப்
பிறகு நாட்டு ஆதிக்கத்தை வென்றெடுத்தவர்கள் எனவும், வென்றவன் சொன்னதே வேதம் என்றாகி விட்டதென்ற உண்மை வரலாறுகளை ஆய்ந்து கூறுவதுதான் இந்நூலின் முக்கிய நோக்கம். 

இந்தப் புத்தகத்தை எழுதி முடித்த பிறகு எங்காவது நான் வரம்பு மீறிவிட்டேனோ என்பதை கண்டறிய திரும்பத் திரும்பப் படித்துப்பார்த்தேன். வரம்பு மீறி போய்விடவில்லை என்பதைக் காணமுடிந்தது.  இவ்வாறு ஆய்ந்து எழுதப்பட்டச் செய்திகளினால் அச்சமுதாயங்களைச் சார்ந்த இன்றைய தலைமுறையினர் நூல் ஆசிரியாரின் பால் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் இவர்களையெல்லாம் சிறுமைப்படுத்த வேண்டும் என்றோஅல்லது இழிவுப்படுத்த வேண்டுமென்ற நோக்குடனோ இந்த நூல்  எழுதப்படவில்லையென்று ஆணையிட்டுக் கூறுவேன். ஆயினும் எவர் மனதாவது புண்படும்படியான செய்திகள் யாதேனும் இந்நூலில் காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டி, ஆதாரங்களுடனே மறுப்பதாக இருந்தால் யாம் அதை திருத்திக் கொள்வதற்கு தயாராக உள்ளோம்.

                தொன்மையில் நடந்தவைகள் யாதும் இன்றைய தலைமுறையினருக்கு பரிச்சயம் இல்லாதவைகள்  ஆகிவிட்டன. எனவே வருங்காலங்களில் இத்தகைய உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிடும் என்பதால் அத்தகைய விவரங்களையெல்லாம் பதிவு செய்வதற்காகவே, பல சிரமங்களினூடே இந்நூல்  எழுதப்படுகிறது. இதனைப் படிக்க நேருகின்ற இளைஞர்கள் உண்மைகளை தெரிந்துகொண்டு தெளிவடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். “ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்” என்ற உண்மையை ஆய்வு கண்ணோட்டத்தில் படித்தறிந்து இவர்கள் தௌpவடைவர் என நம்புகிறேன்.  சில வரலாற்று மேற்கோள்களை ஒன்றுக்கு மேற்பட்டு, நிலைக்கு ஏற்றவாறு எழுத்தாளப்பட்டுள்ளன. அவைகளை கூறுவதைத் திரும்பக்கூறுதல்
(Repetition) என்று கொள்ளவேண்டாம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக