Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 11 ஏப்ரல், 2019

திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு

திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு T_500_1802


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்




மூலவர் : அரங்கநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : திருவரங்கம்
மாவட்டம் : ஈரோடு
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்: -

திருவிழா:
 

புரட்டாசி, பிரம்மோற்சவம்
 

தல சிறப்பு:
 

கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட முதல் சோழர் கோயில் இதுவே.
 

திறக்கும் நேரம்:
 

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 

முகவரி:
 

அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் திருவரங்கம் ஈரோடு.
 


பொது தகவல்:
 

கோயிலின் முன்புறம் மண்டபத்தோடு கூடிய தீபஸ்தம்பம் உள்ளது. அதன் அடிப்பக்கம் கருடாழ்வார், அனுமன், சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளன.
 


பிரார்த்தனை
 

சகல பாக்கியமும் கிடைக்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்யலாம்.
 

நேர்த்திக்கடன்:
 

பிரார்த்தனை நிறைவேறியதும் திருமஞ்சனம் செய்து துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
 

தலபெருமை:
 


ஐந்துநிலை ராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் உயர்ந்து காணப்படுகிறது. அதன் வழியாகச் சென்று கொடி மரம் கடந்தால், முதலில் வருவது வாத்திய மண்டபம், அடுத்து சிறியதும் பெரியதுமாக இரண்டு பலிபீடங்கள் உள்ளன. வெளி பிராகாரத்தில் தென் மேற்குப் பக்கம் கிழக்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானை வணங்கிவிட்டு, அடுத்து சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, ஹயக்ரீவர், விஷ்வக்சேனரை தரிசிக்கிறோம்.

ஆலயத்தின் பின்புறம் கமலவல்லித் தாயார் சன்னதி அமைந்துள்ளது. நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள தாயாரை வழிபட்ட பிறகு அருகிலேயே ஆண்டாள் திருக்கல்யாண மண்டபத்தை அடையலாம். இங்கு சொற்பொழிவுகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

கிழக்குப் பிராகாரத்தில் நான்கு சிற்பத் தூண்களோடு கூடிய ஒரு மண்டபத்தில் பெரிய திருவடிகளை வணங்கலாம். வாத்திய மண்டபத்தின் வட மேற்கில் தெற்கு நோக்கி காட்சி தரும் ஆண்டாளை வணங்கிவிட்டு கருவறை செல்கிறோம். அனந்த சயனனின் திருமுடியின் அருகில் ஸ்ரீதேவியும் திருவடியின் அருகில் பூதேவியும் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். அருகில் துவார பாலகர்களான ஜய விஜயர்களும், அபயம் அளிக்கும் நிலையில் உள்ள அவரது இடது கையில் பிரம்மாவும் எழுந்தருளியுள்ளனர். வலக்கையில் கதாயுதம் உள்ளது. அதன் அருகில் அரங்கநாதரை பிரதிஷ்டை செய்த துர்வாச முனிவர் காட்சி தருகிறார். உள் திருச்சுற்றில் பதினாறு தூண்களைக் கொண்ட மண்டபத்தைக் காணலாம், அதில் அழகிய தெய்வீகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

வாத்திய மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் வேணுகோபாலர் சன்னதி உள்ளது. கருட மண்டபம் இருபத்து நான்கு அழகிய சிற்பத்தூண்களைக் கொண்டது. கருட மண்டபத்தின் பின்புறம் நர்த்தனக் கண்ணன், அனுமன் திருவுருவம் உள்ளது. மகா மண்டபத்தில் ஜய, விஜயர் என்ற இரு துவார பாலகர்கள் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் இரண்டு பெரிய தூண்கள் உள்ளன. கிழக்குத் தூணில், தவழ்ந்து செல்லும் குழந்தைக் கண்ணன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய ஊஞ்சலும் உள்ளது. கருடாழ்வார் வணங்கிவிட்டு வெளி பிராகாரம் வந்தால் ராமானுஜர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.







தல வரலாறு:
 

கி.பி 922 ஆம் ஆண்டு, முதல் பிராந்தக சோழன் காலத்தில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட முதல் சோழர் கோயில் இதுவே.
 

சிறப்பம்சம்:
 

அதிசயத்தின் அடிப்படையில்: கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட முதல் சோழர் கோயில் இதுவே.
 


 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக