இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..இப்பொழுதே இணைந்துகொள்
பிரேசில்
நாட்டில் ஜே. அரிகோ என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்கு எழுதப் படிக்கத்
தெரியாது. அவரது கனவில் அடிக்கடி ஒரு டாக்டர் வந்து கொண்டு இருந்தார்.
கனவில்
அடிக்கடி வந்த அந்த டாக்டரின் வழி காட்டுதலின் படி 1955 இல் ஜே. மக்களுக்கு
வைத்தியம் செய்யத் தொடங்கி விட்டார். காய்களை நறுக்கும் கத்தியைக் கொண்டு வலியே
தெரியாமல் கண் ஆபரேஷனை செய்து முடித்தார். இதனைக் கேள்விப்பட்டு தினமும்
ஆயிரக்கணக்கான நோயாளிகள் அவரைக் காண வந்தனர். அதில் பலர் குணப்படுத்தப்பட்டனர்.
இத்தனைக்கும்
ஜே. அரிகோ நோயாளிகளாக வந்தவர்களிடம் வியாதி என்னவென்று கூட கேட்பது இல்லை. பெயரை
மட்டும் கேட்பார். யாராவது தங்களுக்கு வந்த வியாதியைப் பற்றி எடுத்துச் சொன்னால்
எல்லாம் எனக்குத் தெரியும் என்று கூறி விடுவார். அதற்கு மேல் வந்தவர்களை பேச
அனுமதிக்க மாட்டார்.
இரு முறை
அரசு தானாக முன்வந்து அவரை போலி டாக்டர் என்று கூறி கைது செய்தது. ஆனால், அவர்
செய்த அறுவை சிகிச்சைகளில் ஒன்றில் கூட யாராலும் எந்த ஒரு தவறையும் கண்டு பிடிக்க
முடியவில்லை. அதே போல அவருக்கு எதிராக யாரும் புகார் செய்தது கூட கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் பிரேசில் நாட்டு மக்கள் அவரை பெருமைப்படுத்தித் தான்
பேசினார்கள்.
இப்படிப்பட்ட
ஜே. அரிகோ 1971 இல் சாலை விபத்தில் காலமானார். அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு
முன்பே," நான் பூமிக்கு வந்த வேலை முடிவை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
அதனால் இன்னும் அதிக நாள் நான் உயிருடன் இருக்க மாட்டேன்" என்று சொல்லிக்
கொண்டு இருந்தார். இந்நிலையில் அவர் சொன்னபடியே சில நாட்களில் மரணம் அவரை தழுவியது
ஒரு அமானுஷ விஷயம் தானே!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக