>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 27 ஏப்ரல், 2019

    தேங்காய் அல்வா

    தேங்காய் அல்வா க்கான பட முடிவு.
















    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
    இப்பொழுதே இணைந்துகொள்


    பிள்ளையாருக்குப் பிடித்த தேங்காய் அல்வா

    தேவையான பொருள்கள்:
    ·         பெரிய தேங்காய் 2 
    ·         பச்சரிசி அரை ஆழாக்கு
    ·         நெய் ஒரு கரண்டி
    ·         முந்திரிப் பருப்பு 12 
    ·         தூள் வெல்லம் 2 ஆழாக்கு
    ·         ஏலக்காய் தேவையான அளவு 

    செய்முறை:
    ·         தேங்காயை பூ போல துருவி வைத்துக் கொள்ளுங்கள் (அதாவது தேங்காயை படல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்).
    ·         முழு முந்திரிப் பருப்பை தேவைப்பட்டால் உடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
    ·         அதே போல ஏலக்காயை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். (முன்னமே மொத்தமாகப் பொடியாக்கி கூட வைத்துக் கொள்ளலாம்)
    ·         பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்னர் கல் நீக்கி களைந்து விடவும்.
    ·         பிறகு துருவிய தேங்காயையும், அரிசியையும் மிக்சியில் அரைத்து நன்றாக வெண்ணை போல விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
    ·         ஒரு கனமான பாத்திரத்தில் நீங்கள் மிக்சியில் அரைத்த விழுதைப் போட்டு அடுப்பில் வைத்து உடன் வெல்லத் தூளையும், ஏலக்காயையும் போட்டு (எல்லாம் ஒன்று சேரும் படியாக) சுருள வரும் வரையில் பொறுமையாக நன்றாகக் கிளறவும் (அடிப்பிடிக்கவோ, பாத்திரத்தின் பக்கங்களிலோ ஓட்டக் கூடாது).
    ·         இப்போது நன்கு சுருள வந்தவுடன் நெய்யை விட்டு, முந்திரியையும் வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும்.
    ·         இதோ சுவையான தேங்காய் அல்வா தயார்.

    ·         தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.


    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக