இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
அப்பூதி அடிகள் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63
நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.
அப்பூதியடிகளின் வாழ்க்கை
வரலாறு:-
அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூரில் வசித்த்தரான இவர், மேற்சொன்ன
அறுபத்து மூவருள் முதன்மையான நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் காலத்தில்
7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய
பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும், அவற்றையெல்லாம் இறை
நம்பிக்கையைத் துணைக் கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு அவர் மீது
அளவு கடந்த பக்தி கொண்டார். இதுவே அவரை ஒரு நாயனாராக மதிக்கப்படும் அளவுக்கு
உயர்த்தியது.
திங்களூருக்கு ஒரு முறை சென்றிருந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின்
இல்லம் சென்றார். அப்பூதியடிகள் பெருமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அமுதுண்டு
செல்லுமாறு வேண்டினார். அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த
மகன் பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு
ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு அப்பரை (அதாவது
திருநாவுக்கரசர் அவர்களை) உணவுண்ண வருமாறு அழைத்தார். திருநாவுக்கரசரும் மூத்த
மகன் எங்கே என்று வினவினார். வேறு வழியின்றர் அப்பூதியடிகள். அப்பூதியடிகளின்
அன்பில் மனமுருகிய திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை
உயிர்ப்பித்தார்.
இதுவே அப்பூதியடிகள் நாயனாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு
திருப்புமுனையான சம்பவம். இதனால் அவர் மேலும் ஆன்மீகத்தில் கட்டுண்டு சிவனுக்கு
தொண்டு செய்து இறுதியில் இறை அடி சேர்ந்தார்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக