இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..இப்பொழுதே இணைந்துகொள்
பிள்ளையாரின் அருளைப் பெறலாம்
முழுமுதற் கடவுளாம் பிள்ளையார், வெவ்வினைகளை
வேரறுக்கவல்ல தெய்வம் ஆவார். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் முறைப்படி விநாயகரை
வழிபட்டால், சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.
திருமண வரம் வாய்க்கவும், நோய்கள் குணமாகவும், குழந்தைச் செல்வம் கிடைக்கவும், வேலை வாய்ப்பு பெறவும், கடன் தொல்லைகளும் பித்ருதோஷங்களும் நீங்கவும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பிள்ளையாரை வழிபட்டு பலனடையலாம். இந்தத் திருநாளில், இங்கு தரப்பட்டிருக்கும் விவரப்படி இலைகள், பூக்கள் மற்றும் கனிகளைப் பிள்ளையாருக்குச் சமர்ப்பித்து வழிபடுவதால், விசேஷ பலன்களைப் பெறலாம் என்று ஆன்மிக ஆன்றோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
திருமண வரம் வாய்க்கவும், நோய்கள் குணமாகவும், குழந்தைச் செல்வம் கிடைக்கவும், வேலை வாய்ப்பு பெறவும், கடன் தொல்லைகளும் பித்ருதோஷங்களும் நீங்கவும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பிள்ளையாரை வழிபட்டு பலனடையலாம். இந்தத் திருநாளில், இங்கு தரப்பட்டிருக்கும் விவரப்படி இலைகள், பூக்கள் மற்றும் கனிகளைப் பிள்ளையாருக்குச் சமர்ப்பித்து வழிபடுவதால், விசேஷ பலன்களைப் பெறலாம் என்று ஆன்மிக ஆன்றோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
* மாவிலை – நியாயம்
கிடைக்கும்; வழக்குகள் சாதகமாகும்.
* வில்வ இலை –
வாழ்வில் இன்பம் நிலைக்கும்.
* கரிசலாங்கண்ணி –
இல்வாழ்க்கை இனிக்கும்.
* இலந்தை –
கல்வியில் வெற்றி பெறலாம்.
* அரசு – உயர்பதவி,
நன்மதிப்பு கிடைக்கும்.
* மரிக்கொழுந்து –
இல்லறம் நல்லறமாகும்.
* நெல்லி – செல்வச்
செழிப்பு பெறலாம்.
* மருதம் – குழந்தை
வரம் பெறலாம்.
* ஜாதி மல்லி –
சொந்த வீடு, பூமி பாக்கியம் கிடைக்கும்.
* மாதுளை – பேரும்
புகழும் கிடைக்கும்.
* அருகம்புல் – சகல
வித பாக்கியங்களும் பெறலாம்.
* வன்னி –
இவ்வுலகில் வாழும் காலத்திலும் அதற்குப் பிறகும் நன்மைகள் கிடைக்கும்.
காலசர்ப்ப தோஷம் நீங்கும்
காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகருக்கு முன்னேற்றத் தடை, இல்லற வாழ்வில்
பிரச்னைகள், குழந்தை பாக்கியம் இல்லாமை ஆகியன ஏற்படும்.
இந்தக் காலசர்ப்ப தோஷத்தை சுப
காலசர்ப்பம் என்றும், அசுப காலசர்ப்பம் எனும் இருவகையைக் குறிப்பிடுகின்றன ஜோதிட
நூல்கள். மேஷத்தில் அசுவினி நட்சத்திரத்தில் கேதுவும், துலாமில் சுவாதி
நட்சத்திரத்தில் ராகுவும், மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராகுவும், தனுசில்
மூலம் நட்சத்திரத் தில் கேதுவும், சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் கேதுவும்,
கும்பத்தில் சதய நட்சத்திரத்தில் ராகுவும் இருந்தால் சுப காலசர்ப்பம். இதனால்,
பாதிப்பு இருக்காது. இந்த அமைப்பைத் தவிர வேறு இடங் களில் ராகு கேது இருந்து,
அவற்றுக்கிடையில் மற்ற கிரகங்கள் அமைந்திருந்தால், அசுப காலசர்ப்ப தோஷம் ஆகும்.
இந்த தோஷம் உள்ளவர்கள், திருக்கோயில்களில் அரச மரத்தின் அடியில்
பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் நாகர் சிலைகளுக்குப் பாலபிஷேகம் செய்து
வழிபடலாம்.
வியாபாரம் செழிக்கும்
உங்கள்
வியாபாரம் செழிப்பாக இருக்கிறதா? நீங்களே எதிர்பாராத அளவுக்கு லாபம் பன்மடங்காகி
உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறதா? எனில், உங்கள் ஜாதகத்தில் வியாபாரகாரகனான
புதன் இருக்கும் இடத்துக்கு, தேவகுருவும் தனகாரகனுமான வியாழனின் பார்வை பரிபூரணமாக
உள்ளது. குருவருள் இருக்க திருவருளும் சேரும்; உங்கள் வியாபாரம் இன்னும் இன்னும்
வளர்ந்தோங்கும்.
அதேபோல், ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர்
வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெறுவார். புதன் பலம் இல்லாதவர்கள் வியாபாரத்தில்
ஈடுபடாமல் இருப்பது அவசியம். புதன் பலம் உள்ளவர்கள், புதனுக்கு அதிதேவதையான
திருமாலை புதன்கிழமைதோறும் வழிபடுவதன் மூலம் வியாபாரத்தில் அதிவேகமாக முன்னேறலாம்;
அதிக லாபமும் பெறலாம்.
புத்திர தோஷம் நீங்கும்
ஐந்தாம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு அல்லது கேது ஆகிய
கிரகங்கள் இருந்தால். புத்திர தோஷம் ஆகும். 5-ம் வீட்டுக்கு உரிய கிரகம் பாவ
கிரகங்களுடன் சேர்ந்தாலும், பாவ கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தாலும், 3, 6,
8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெற்றிருந்தாலும் புத்திர தோஷம் உண்டாகும்.
தம்பதியரின் ஜனன ஜாதகத்தில் ஒருவருக்குப் புத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டு,
மற்றவருக்குப் புத்திரஸ்தானம் வலுப்பெற்று இருந்தால், அவர்களுக்குப் பெண் குழந்தை
பிறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஒருவருக்காவது புத்திரஸ்தானம் நல்ல
நிலையில் இருப்பது அவசியம்.
புத்திர தோஷத்தை நிவர்த்திசெய்யும்
தலமாகப் பிரசித்தி பெற்றிருக்கும் ராமேஸ்வரத்துக்குச் சென்று, கடலில் 21 முறை மூழ்குவதுடன்,
அங்குள்ள 21 தீர்த்தங்களிலும் தீர்த்தமாட வேண்டும். பிறகு புத்திர பாக்கியம் அருளுமாறு
பக்தி பூர்வமாகப் பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும். குருவாலும் சந்திரனாலும் புத்திர
தோஷம் ஏற்பட்டிருந்தால், வியாழக் கிழமையன்று திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானுக்கு
அர்ச்சனை செய்து வழிபட்டு, அங்குள்ள ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வர வேண்டும். இப்படி
27 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மேலும், சந்தானகோபால விரதம் இருந்து, கண்ணனை வழிபட்டு வந்தாலும் குழந்தை வரம் கிடைக்கும்.
இன்பம் நிலைக்கும்
வீட்டில் மங்கலம் நிறைந்திருக்கவும் சகல
சம்பத்துகளும் பல்கிப்பெருகி இன்பம் நிலைக்கவும், தினமும் திருவிளக்கு ஏற்றிவைத்து
கீழ்க்காணும் திருமந்திரப் பாடலைப் பாடி வழிபடவேண்டும்.
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே, வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே
விளக்கினின் முன்னே, வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே
– திருமந்திரம் 1818
கருத்து: ஞான
விளக்கினை ஏற்றி, எல்லையின்றி நிற்கும் பரம்பொருளை அறிந்துகொள்ளுங்கள். பரம்பொருள்
பிரகாசத்தின் முன்னர், மாயா, மல இருள் ஆகிய வேதனைகள் மாறிவிடும். பேரொளியை
வெளிப்படுத்தும் ஒளி உடையார்கள், சிவ ஒளியும் ஆத்ம ஒளியும் கலந்து விளங்குவார்கள்.
விளக்குத் தொண்டு ஆலயத்தில் ஒளி சேர்க்கும். விளக்கு ஏற்றுபவரது
வீடும் வாழ்வும் இருள் நீங்கி ஒளி பெறும். ‘இல்லக விளக்கு அது இருள்
கெடுப்பது’ என்று தொடங்கி திருநாவுக்கரசரும் விளக்குத் தொண்டினைப் போற்றியுள்ளார்.
திருவிளக்கின் பீடம் பிரம்மா, தண்டு திருமால், விளக்கு சிவன். இப்படி
குத்துவிளக்கில் மூன்று தெய்வங்களும் நின்று அருளுகின்றனர். ஆகவே, அனுதினமும்
வீட்டில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, விளக்கு குறித்து திருமூலர் தந்த பாடலைப்
பாடி வழிபடுவதால், நம் வீட்டில் இன்பம் எனும் பேரொளி என்றென்றும்
நிலைத்திருக்கும்.
நவகிரகங்களும் நற்பலன்கள் அருள…
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக