Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

முடி சரசரனு வேகமா வளரணுமா? இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…

முடி சரசரனு வேகமா வளரணுமா? இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்… க்கான பட முடிவு

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்

கூந்தல் வளர்ச்சி

கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய்கள் மிக முக்கிய காரணமாக உள்ளன. பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கு பழக்கம் இன்றைய நாட்களில் மிகவும் குறைந்து விட்டது. நேரமின்மை மற்றும் ஸ்டைல்
காரணமாக தலை முடிக்கு எண்ணெய் தடவுவதைப் பலரும் புறக்கணிக்கின்றனர். ஆனால், தலை முடிக்கு எண்ணெய் தடவுவதால் தலைமுடியின் வேர்க்கால்கள் வலிமை பெற்று முடி வளர்ச்சி தூண்டப் படுகிறது. குறிப்பாக சில எண்ணெய்களை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கிறது. விரைவான கூந்தல் வளர்ச்சி, பேன் ஒழிப்பு , பொடுகு போக்குவது , முடி உதிர்வைக் குறைப்பது போன்றவற்றில் சில எண்ணெய்கள் நல்ல தீர்வைத் தருகின்றன. மக்கள் பொதுவாக பாதிக்கப்படும் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் முடி வளர்ச்சி சாத்தியமாகிறது.

எப்படி வளரும்?

சில குறிப்பிட்ட எண்ணெய்களைக் கொண்டு தலை முடிக்கு மசாஜ் செய்வது, சில குறிப்பிட்ட எண்ணெய்களை கண்டிஷ்னரில் கலந்து தேய்ப்பது போன்ற முறைகள் நல்ல ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றன. அந்த வகையில் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சில எண்ணெய்கள் , மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் ஆகியவை இதோ உங்களுக்காக..
அடர்த்தியான நீளமான கூந்தல் பெற, கீழே குறிப்பிட்டுள்ள எண்ணெய்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கியமான கூந்தலைப் பெற்றிடுங்கள்.

லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்

எல்லா விதமான கூந்தலுக்கும் ஏற்ற விதத்தில் விளங்கும் ஒரு எண்ணெய் லாவெண்டர் எண்ணெய். லாவெண்டர் எண்ணெய்யில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்பு, உச்சந்தலையில் உண்டாகும் தொற்று பாதிப்பைப் போக்க உதவுகிறது. உங்கள் தலைமுடியில் உள்ள பொடுகைப் போக்கவும், அடர்த்தியான கூந்தலைப் பெறவும், லாவெண்டர் எண்ணெய் சிறந்த பலனைத் தருகிறது. ஒரு கண்ணாடி பாத்திரத்தில் லாவெண்டர் எண்ணெய் சிறு துளிகள் சேர்த்து, அதன் மேல் சிறிதளவு எக்ஸ்ட்ரா ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
பிறகு இறுக்கமாக அந்தப் பாதிரத்தை மூடவும். மூன்று முதல் நான்கு வாரங்கள் இந்த எண்ணெய்யை அப்படியே மூடி வைத்திருந்து பின்பு, லாவெண்டர் எண்ணெய் ஊறிய அந்த எண்ணெய்யை எடுத்துப் பயன்படுத்தவும். அந்த லாவெண்டர் எண்ணெய்யை உங்கள் உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். ஒரு இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு , அடுத்த நாள் காலை மிதமான மூலிகை ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். இப்படி செய்வதால் விரைவில் உங்களுக்கு நீளமான அடர்த்தியான பளபளப்பான கூந்தல் கிடைக்கும்.

ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்

எந்த வித பாகுபாடின்றி எல்லா வித கூந்தலுக்கும் பலனளிக்கும் மற்றொரு எண்ணெய் ரோஸ்மேரி எண்ணெய். உற்சாகமும், ஊக்கமும் தரும் விதத்தில் அமைத்திருக்கும் இந்த எண்ணெய்யின் நறுமணம், முடி வளர்ச்சியை விரைவாக்குவதுடன் ஆரோக்கியமான வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்துவதால் நரை முடி வளர்ச்சி தாமதமாகிறது. ஆகவே நீண்ட நாட்கள் கருமையான நீளமான கூந்தலுடன் அழகாக இருக்க முடியும்.
நரை முடி வளர்ச்சியை தாமதிக்க ஒரு சிறந்த வழி, ரோஸ்மேரி இலைகளை கை நிறைய எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு தலையை அலசுவதால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இப்படி செய்து வருவதால், உங்கள் முடி கருமையாக வளரும். அல்லது, ரோஸ்மேரி எண்ணெய் சில துளிகள் எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் தடவலாம். இப்படி செய்வதால், தலை முடியின் வேர்க்கால்கள் ஊக்குவிக்கப்பட்டு, இயற்கையாகவே அடர்த்தியான கூந்தல் கிடைக்கிறது. உங்கள் கூந்தலின் இயற்கையான வளர்ச்சிக்கு மற்றொரு வழி, ரோஸ்மேரி எண்ணெய்யை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஷாம்பூவை வாங்கி பயன்படுத்தலாம்.

எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்

எலுமிச்சையின் எந்த ஒரு வடிவமும் கூந்தலுக்கு நன்மை அளிப்பதாகவே உள்ளது. ஆகவே, இந்த பதிவில் எலுமிச்சையும் ஒரு பகுதியாக உள்ளது. உங்களுக்கு வறண்ட தலைமுடி இருந்தால், அதனை மாற்றி சிறந்த தீர்வைத் தர எலுமிச்சை எண்ணெய் பயன்படுகிறது. எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய் , உடலின் எண்ணெய் சுரப்பிகளை ஊக்குவித்து , அதிக எண்ணெய் உற்பத்திக்கு உதவுகிறது, இதனால் முன்பை விட மென்மையான பளபளப்பான தலை முடி உருவாகிறது.
இந்த எல்லா நன்மைகளுக்கும் மேலாக, எலுமிச்சை எண்ணெய் பொடுகு தொடர்பான எல்லா பிரச்சனைகளையும் போக்குகிறது. மேலும் பேனை நிரந்தரமாக போக்குகிறது. தலைக்கு ஷாம்பூ போட்டு தேய்த்தவுடன், உங்கள் கைகளில் எலுமிச்சை எண்ணெய் நான்கு துளிகள் விட்டு , தலை முடி முழுவதும் தேய்க்கவும் . பிறகு தலையை அலசவும். இதனால் குளித்து முடித்தவுடன், உங்கள் தலை முடி இயற்கையான முறையில் பொலிவு பெறுகிறது. இருப்பினும் இது சிட்ரஸ் எண்ணெய் என்பதால், கூந்தலின் ஒளியுணர்திறனனை அதிகரிக்கிறது. ஆகவே சூரிய ஒளியின் கடினமான கிரணங்களில் இருந்து கூந்தலைக் காக்க வேண்டும், இல்லையேல் கூந்தல் நிறமிழப்பு அல்லது கருகும் வாய்ப்பு உள்ளது.

கிச்சிலி எண்ணெய்

கூந்தல் உதிர்வு மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது. இந்த எண்ணெய்யை நேரடியாக தலையில் தடவலாம். தொடர்ச்சியாக இந்த எண்ணெய்யை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் கூந்தலின் தன்மையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மேலும், இந்த எண்ணெய்யுடன் சில துளிகள் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நீங்களே ஒரு மருந்தாக தயாரிக்கலாம்.
இந்த எண்ணெய்க்கு pH சமநிலைத் தன்மை உண்டு. அதனால் உங்கள் கன்டிஷ்ணருடன் சில் துளிகள் இந்த எண்ணெய்யைசேர்த்துக் கொண்டு ஒவ்வொரு முறை தலை அலசவும் பயன்படுத்தலாம். எலுமிச்சை எண்ணெய் போன்றே கிச்சிலி எண்ணெய்க்கும் ஒளி உணர்திறன் இருப்பதால், சூரிய ஒளியின் நேரடி தாக்கம் இருக்கும் இடத்தில் கூந்தலை பாதுகாக்க வேண்டும்.

சைப்ரஸ் எண்ணெய்

அலோபிசியா என்னும் தலை முடி வழுக்கைக்கு ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படும் இந்த எண்ணெய், கூடுதலாக , எண்ணெய் பசைத் தன்மை உள்ள உச்சந்தலைக்கு நல்ல ஒரு தீர்வைத் தருகிறது. சைப்ரஸ் எண்ணெய்யை பல வழிகளில் பயன்படுத்தி அதன் சிறப்பை பெற முடியும். ஜாதிபத்திரி, லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றுடன் சேர்த்து கலந்து தயாரிக்கப்படும் ஒரு கலவை தலை முடி வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்பது உறுதி. சைப்ரஸ் எண்ணெய்யை பயன்படுத்த இது ஒரு சிறப்பான வழியாகும். கண்டிஷ்னரில் ஒன்று அல்லது இரண்டு துளிகள் சைப்ரஸ் எண்ணெய் சேர்த்து தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்திய பின்னர், பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ச்சியாக செய்து வரும் வேளையில், உங்கள் கூந்தலில் குறைவான காலத்தில் ஒரு சிறந்த மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

பாதாம் எண்ணெய்

வறண்ட தலை முடிக்கு பாதாம் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். பாதாம் எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடாக்கி, உங்கள் தலை முடியில் தொடர்ச்சியாக தடவி வரவும். உச்சந்தலையில் இந்த எண்ணெய்யை தடவி, மென்மையாக மசாஜ் செய்து வருவதால், எண்ணெய் சுரப்பிகள் அதிக எண்ணெய்யை உற்பத்தி செய்ய உதவுகிறது, இதனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக பளபளப்பாக , நுனி முடி உடையாமல் வளரும்.
அல்லது இந்த பாதாம் எண்ணெய்யை சூடாக்கி, உங்கள் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு தலையை வழக்கமான ஷாம்பூ கொண்டு அலசவும். இப்படி செய்து வருவதால், சேதமடைந்த உங்கள் தலைமுடி இயற்கையாக அதன் புத்துணர்ச்சியைப் பெறுவதை உங்களால் காண முடியும்.

கேரட் எண்ணெய்

புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமும் கொண்ட கூந்தலைப் பெற, கேரட் எண்ணெய் பயன்படுகிறது. இந்த எண்ணெய்யை நேரடியாக உங்கள் தலை முடியில் தடவலாம். அல்லது ஜோஜோபா எண்ணெயுடன் கலந்து இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக வளர்கிறது. கேரட் எண்ணெய், கரோடின் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இதனால் கூந்தல் வளர்ச்சி மற்றும் சரும புத்துணர்ச்சி ஆகிய இரண்டும் ஒரு எண்ணெய்யால் சாத்தியமாகிறது. ஆகவே, இனி காத்திருக்க வேண்டாம்…கேரட் எண்ணெய்யை பயன்படுத்த தயாராகி விடுங்கள் .. ஒரு சிறு குறிப்பு – கேரட் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் ஒவ்வொரு முறையும் ஒரு மிகச் சிறிய அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக