Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 6 ஏப்ரல், 2019

வெயில் காலங்களில் கொய்யாப்பழம் சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் தெரியுமா?

கொய்யாப்பழம் க்கான பட முடிவு

அற்புதம் நிறைந்த கொய்யா!
பல வகையான பழங்கள் இருந்தாலும் கொய்யாவிற்கு என்று ஒரு தனி தன்மை உள்ளது. இதன் சுவை, இதன் நலம், இதன் பண்பு… இப்படி எல்லா வகையிலும் இந்த பழம் நமக்கு நல்லதை தான் செய்கிறது.
அதிக இனிப்பும், சிறிது துவர்ப்பும் கலந்த சுவையை பெற்றிருப்பதாலே இதற்கு இவ்வளவு மகிமைகள் உள்ளது. இதில் வைட்டமின் எ, பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
நார்சத்து
கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் எடை குறையும். இதற்கு முக்கிய காரணமே இதிலுள்ள நார்ச்சத்துக்கள் தான். மேலும், செரிமான கோளாறுகளை ஏற்படுத்தாமல் இருக்க இந்த பழம் உதவும். கூடவே இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.
நீர்சத்து
கொய்யாவில் நீர்சத்து அதிக அளவில் உள்ளது. இந்த வெயில் காலங்களில் அவ்வப்போது ஒரு கொய்யா சாப்பிட்டால் நீர்சத்து குறைபாடு ஏற்படாது. மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளவும் இந்த பழம் உதவுகிறது.
பொட்டாசியம்
அதிக அளவில் பொட்டாசியம் இந்த பழத்தில் காணப்படுகிறது. இதனால் இதய நோய்களை தடுத்து இதயத்தை பல்வேறு பாதிப்புகளில் இருந்து காத்து கொள்ளுமாம். அத்துடன் இரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்கவும் கொய்யாப்பழம் உதவுகிறது.
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்
ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிக அளவில் கொய்யாவில் உள்ளது. அதே போன்று எண்ணற்ற அளவில் ஆன்டி ஆக்சிடெண்ட்களும் உள்ளன.
எனவே, நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலை இந்த பழம் தரும். வெயில் காலங்களில் கொய்யாவை சாப்பிட்டு வந்தால் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
மன அழுத்தம்
மற்ற காலங்களை விடவும் வெயில் காலங்களில் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். அதிக வெயில் போன்ற புற சூழல் தான் இதற்கு மூல காரணமே. கொய்யாவை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, மன அழுத்தத்தை தடுத்து விடலாம்.
கொலஸ்ட்ரால்
கொய்யாவை சாப்பிட்டு வருவதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மேலும், நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.
இதனால் மிக சுலபமாக மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகளை தடுத்து விடலாம். கூடவே உடல் பருமனையும் குறைத்து விட இது உதவும்.
நரம்பு மற்றும் தசைகள்
கொய்யாவில் அதிக அளவில் மெக்னீசியம் சத்து நிறைந்திருப்பதால் நரம்புகளை இலகுவாக்கி பாதிப்புகள் இல்லாமல் பார்த்து கொள்ளும். அதே போன்று தசைகளில் ஏற்படுகின்ற அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
தினம் ஒரு கொய்யா!
வெயில் காலங்களில் தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டு வந்தால் வெயில் காலங்களில் ஏற்பட கூடிய தொற்று நோய்களில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம்.
சாதாரண கொய்யாவை விட நாட்டு கொய்யாவில் அதிக நலன்கள் உள்ளது. ஆதலால், இதை சாப்பிட்டு வருவது சிறப்பு.

 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக