Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 3 ஏப்ரல், 2019

போடா போடா புண்ணாக்கு !

போடா போடா புண்ணாக்கு ! க்கான பட முடிவு


அந்த சலூன்காரருக்கு ஒரே பெருமை ! தன் வாடிக்கையாளிடம் தன் சாகசபெருமைகளை பீற்றி கொண்டிருந்தார். " சார், இந்த கடைய நடத்த என்னஎல்லாம் வேலை செய்ய வேண்டி இருக்கு சார். என்கிட்ட வர எல்லாரும்திருப்தியா போகணும்னு யோசிச்சி யோசிச்சி புதுசு புதுசா 'கட்டிங்' பண்ணணும், வேற எந்த சலூன்லயும் இல்லாத வசதி இங்க இருக்கு சார்"

வாடிக்கையாளர் : அப்படியா ? அப்ப நீங்க ரொம்ப புத்திசாலி னு சொல்லுங்க

ச.கடைகாரர் : அதுல என்ன சார் சந்தேகம் ? இந்த காலத்துல என்ன மாதிரிமூளையோட இல்லை னா பொழைக்க முடியாது சார்.

வாடிக்கையாளர் : ஹும்....

ச.கடைக்காரர்: சாருக்கு இன்னும் சந்தேகம் போகலே போல. இருங்க இன்னும்கொஞ்ச நேரத்துல என் கடைக்கு ஒரு சின்ன பையன் வருவான். தினமும்வருவான். என்கிட்ட காசு கேப்பான், நான் ஒரு கையில 5 ரூபாயும் இன்னொருகையில 2 ரூபாயும் வெச்சி எது வேணும்னாலும் எடுத்துக்கோ னுசொல்லுவேன். ஹா....ஹா....அவன் தினமும் 2 ரூபாய்யை எடுத்துகிட்டுபோவான். முட்டா பய ஹா...ஹா....! பாத்துகிட்டே இருங்க.

வாடிக்கையாளர் : சரி...இன்னிக்கி பாக்கலாம்.

சொன்னது போலவே ஒரு சிறுவன் கடைக்கு வந்தான்.

சிறுவன் : அண்ணா வணக்கம். நல்லா இருக்கீங்களா ?

ச.கடைக்காரர் : டேய், வாடா தம்பி, நல்லா இருக்கியா ? என்ன வேணும் டா ?

சிறுவன் : அண்ணா முட்டாய் வாங்க காசு குடுண்ணா.

ச.கடைக்காரர் : ஹா..ஹா...சரி, இந்தா ..5 ரூபாய், 2 ரூபாய் எது வேணுமோஎடுத்துக்கோ.

சிறுவன் அவர் கையில் இருந்து 2 ரூபாய்யை எடுத்துக்கொண்டு ஒடுகிறான்.

வாடிக்கையாளர் : டேய் தம்பி. கொஞ்சம் நில்லுடா . நானும் பாத்துகிட்டே தான்இருந்தேன். அவர்தான் 5 ரூபாயும் 2 ரூபாயும் காட்டி எது வேணுமோஎடுத்துக்கோ னு சொல்றாருல்ல, சரியான ஏமாளியா இருக்கியே? 5 ரூபாய்எடுத்துகிட்டா நெறைய முட்டாய் வாங்கலாம்ல ? ஏண்டா இவ்ளோ முட்டாளாஇருக்கே ?

சிறுவன் : சார் , நீங்க வெளிய வாங்க சார். சொல்றேன்.

ச. கடைக்காரர் : ஹா..ஹா...போய் கேளுங்க சார். என்ன நொண்டி சாக்குசொல்றான் பாப்போம்.

வாடிக்கையாளர் கடைக்கு வெளியே சென்று சிறுவனை பார்க்கிறார்.

வாடிக்கையாளர் : இப்போ சொல்லுடா.

சிறுவன் : சார், அது வேற ஒண்ணும் இல்ல, தினமும் அண்ணா ஒரு 5 ரூபாயும்ஒரு 2 ரூபாயும் காட்டி எது வேணும் னு கேக்கறார். நான் 2 ரூபாய் எடுத்துகிட்டுஓடினா அவருக்கு என்னை ஏமாத்தின மாதிரி ஒரு சந்தோஷம். ஆனா என்னிக்குநான் 5 ரூபாய் எடுக்கறேனோ, அவ்ளோதான் அடுத்த நாள் எனக்கு கிடைக்கிற 2 ரூபாயும் கிடைக்காம போயிடும். ஒரு நாளைக்கு கிடைக்கிற 5 ரூபாய் பெரிசாஇல்ல தினமும் கிடைக்கிற 2 ரூபாய் பெரிசா சார் ?

வாடிக்கையாளர் : ?????????

நீதி : எல்லாம் தெரிந்தவரும் யாருமில்லை, எதுவுமேதெரியாதவரும் யாரும் இல்லை. தோற்றத்தை பார்த்து எடைபோட கூடாது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக