Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 3 ஏப்ரல், 2019

அட பிரதமன்


அட பிரதமன் க்கான பட முடிவு

கேரளக் கரையோரம் செய்யப்படும் பாயச வகைகளில் ஒன்று அட பிரதமன் ஆகும். 'அடஎன்றால் அரிசி மாவு துண்டுகளையும்,  'பிரதமன்என்றால் அவ்வரிசி துண்டுகள் சேர்க்கப்படும் இனிப்பு சுவை மிகுந்த தேங்காய் பாலையும் குறிக்கும். பிரதமன் என்றால் 'முதன்மைஎன்பதையும் குறிப்பதால்,  பாயாசங்களில் முதல் இடத்தை இது வகிக்கிறது. கேரள இல்லங்களின் அனைத்து விழாக்களிலும் இது முக்கியமாக சமைக்க படுகிறது. இதன் திவ்யமான சுவைஉண்போர் மனதை கொள்ளை கொள்கிறது. முக்கியமாகஓணப்  பண்டிகையின் 'ஓண சந்த்யாவேளையில் இது படைக்கப் படுகிறது !





தேவையான பொருள்கள் :

அட மாவு தயாரிக்க :
  • அரிசி – 1/2 கப்
  • நெய் - தேக்கரண்டி
  • சர்க்கரை - தேக்கரண்டி
  • சுடு நீர் - தேவையான அளவு
  • வாழையிலை - தேவையான அளவு


பிரதமன் தயாரிக்க :

  • தேங்காய் - 1 ; துருவியது
  • பாகு வெல்லம் – 1/2 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • தேங்காய் பல் – 1/4 கப்
  • வறுத்த முந்திரி - அலங்கரிக்க


செய்முறை :

அட மாவு தயாரிக்க :
வழிமுறை 1 ( பாரம்பரிய முறை )
  அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்துநன்கு வடிகட்டி, 2 மணி நேரமாவது நிழலில் உலர்த்த வேண்டும்.

  பின்பு மிக்ஸியில் இட்டு மெல்லிய பொடியாக அரைத்துஒரு சல்லடையில் இட்டு நன்கு சலிக்க வேண்டும்.

  பிறகுஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து கொண்டுஉருக்கிய நெய்சர்க்கரை சேர்த்துநன்கு பிசிற வேண்டும்.

  சிறிது சிறிதாக சுடு நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்.

வழிமுறை 2 (சுலப முறை )
  அரிசியை மணி நேரம் ஊறவைத்துநன்கு வடிகட்டிகிரைண்டரில் இட்டு சிறிது சிறிதாக நீர் சேர்த்து மை போல் அரைக்க வேண்டும்.

  பிறகுஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து கொண்டுஉருக்கிய நெய்சர்க்கரை சேர்த்துநன்கு கலந்து கொள்ள வேண்டும்

அட செய்ய :
  வாழை இலைகளை இன்ச் அகல துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

  அவற்றை அடுப்பு தணலில் சில நொடி மேலும் கீழும் காட்டிவாழை இலை இளகும் வரை  வாட்டி எடுக்கவும்.

  இதற்கு இடையில்ஒரு பெரிய பாத்திரத்தில்நிறைய நீர் எடுத்து கொதிக்க விடவும்.

  இந்த வாழை இலை துண்டுகள் ஒவ்வொன்றிலும், 2 தேக்கரண்டி மாவை வட்டமாக ஊற்றிசுருட்டிஇரண்டு முனைகளையும் நூலால் கட்டவும்.

  உடனே கொதிக்கும் நீரில் இந்த சுருளை போட்டு விட வேண்டும். இது மிகவும் முக்கியம்.

  மாவு முழுதும் தீரும் வரைஇவ்வாறு சுருள்கள் செய்து கொதிக்க விட வேண்டும்.

  சுருள்கள் நன்கு வெந்ததும்மேலே மிதக்கும்.

  அப்போதுவெளியே எடுத்து மாவு துண்டுகளை இலையில் இருந்து நீக்கி, 3-4 முறை குளிர் நீரில் அலம்ப வேண்டும்.

  இவ்வாறு அலம்புவதால்அதன் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும்.

  பிறகுஅவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

மாற்று முறை :

கொதிக்க வைப்பது விடநீராவியில் வேக வைப்பதும் சிறந்தது. உங்கள் சௌகர்யத்திற்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.




பிரதமன் செய்ய :

  துருவிய தேங்காயை மிக்சியில் இட்டுமுதலில் 1/4 கப் கெட்டி பால் எடுத்து கொள்ள வேண்டும்

  பிறகு, 1 ½ கப் இரண்டாம் பால் எடுத்து கொள்ள வேண்டும்

  அடுத்து, 2 கப் மூன்றாம் பால் எடுத்து கொள்ள வேண்டும்

  அடி கனமான பாத்திரத்தை சூடாக்கிமூன்றாம் பால்வெல்லம் மற்றும் சர்க்கரையை கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்

  பிறகு இரண்டாம் பாலையும்அட துண்டுகளையும் சேர்த்து நிமிடம் கொதிக்க விடவும்.

  இப்போது தேங்காய் பல் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும்.

  முதலில் எடுத்த கெட்டி பாலை சேர்த்துஉடனே அடுப்பை அணைத்துநன்கு கலக்கவும்.

இதோ சுவையான அட பிரதமன் தயார் !


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!