இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
வலிப்பு என்பது திடீரென ஒருவரின்
உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட
உடல்நலக் கேட்டினாலோ அல்லது ‘எபிலப்சி’ என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு
ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால்,
ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான
ஒன்றாகும்.
அறிகுறிகள்:-
1. உடல் தசைகள் இறுக்கமாகவும்
கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.
2. நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக்
கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
3. முகம் மற்றும் உதடு போன்றவை
நீலநிறமாக மாறிவிடுதல்.
4. சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர்
அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.
மேற்கண்ட இந்நிலையில் நாம் செய்ய
வேண்டிய முதலுதவி சில:-
1. பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள
அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில்
மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
2. நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ
அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக் கூடாது.
3. எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும்
கொடுக்கக் கூடாது.
4. மூச்சு இழக்க நேரிட்டால்,
பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல
காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
5. மருத்துவ உதவி கிடைக்கும் வரை
பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.
இது முதல் உதவி செய்பவரின் முக்கியப் பொறுப்பு.
6. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்
வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்
அதற்குள் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுதல் நலம்.
முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட
நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக