இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
ஆன்லைனில் வொர்டு பிராசஸிங் செய்ய
பிரபல சேவையாக கூகுள் நிறுவனத்தின் டாக்ஸ் சேவை இருக்கிறது. இது மைக்ரோசாஃப்ட்
நிறுவனத்தின் வொர்டு மென்பொருளுக்கும் இது மாற்றாக இருக்கிறது. கூகுள் டாக்ஸ்
சேவையில் பல்வேறு அடிப்படை வசதிகள், ஷார்ட்கட்கள் வழங்கப்படுகின்றன. இவை வொர்டு
பிராசஸிங் பணியை சுலபமாக்குகிறது.
இவை தவிர டாக்ஸ் சேவையில் கூகுள் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை இயக்குவதற்கான வசதியையும் வழங்குகிறது. இதை கொண்டு கீபோர்டு உதவியின்றி டைப்பிங் செய்ய முடியும். இந்த அம்சம் தற்சமயம் ஆங்கிலம், அஃப்ரீகன்ஸ், நேபாளி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.
அன்றாட தேவைகளில் இந்த அம்சத்தை
ஆக்டிவேட் செய்து பயன்படுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
முன்கூட்டியே செய்ய வேண்டியவை: -
சாதனத்தின் மைக்ரோபோன் சீராக வேலை
செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
சீரான இணைய இணைப்பு.
கணினியில் கூகுள் குரோம் பிரவுசர்
இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1 - குரோம் பிரவுசரில் கூகுள் டாக்ஸ்
திறக்க வேண்டும்
2 - இனி + ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். ஏற்கனவே
திறந்திருக்கும் டாக்யூமென்ட்டையும் எடிட் செய்யலாம்
3 - இனி டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து
வாய்ஸ் டைப்பிங் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
4 - இவ்வாறு செய்ததும் திரையின் இடதுபுறம்
மைக்ரோபோன் ஆப்ஷன் தெரியும். இதனை பயனர்கள் எங்கு வேண்டுமானாலும் டிராக் செய்து
கொள்ள முடியும்
5 - இனி, மைக்ரோபோன் ஐகானை க்ளிக்
செய்து அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்
6 - மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்து
பேச துவங்கலாம்
குறிப்பு: மொழியை மாற்ற விரும்பினால்,
மைக்ரோபோன் ஐகான அருகில் கீழ்புற அம்புகுறியை க்ளிக் செய்து மொழியை தேர்வு செய்ய
வேண்டும். சிறப்பான குரல் அங்கீகாரத்திற்கு கூடுதலாக மைக்ரோபோன் பயன்படுத்தலாம்.
இந்த அம்சத்தால் சிறப்பாக பயன்பெற அமைதியான இடத்தில் அதனை முயற்சிக்கலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக